Home

குசல் அதிரடி-தொடர் தோல்விகளுக்கு முடிவு கட்டியது இலங்கை.

குசல் அதிரடி-தொடர் தோல்விகளுக்கு முடிவு கட்டியது இலங்கை.

இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிதாஹஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு ஆர் பிரேமதாசா மைதானத்தில் இன்று இடம்பெற்ற இந்திய அணியுடனான போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 175 ஓட்டங்கள் பெற்றது. பதிலுக்கு ஆடிய இலங்கை அணி குசல் பெரேராவின் அதிரடியில் வெற்றிபெற்று அசத்தியது.

இந்தியாவிற்கு எதிராக T20 போட்டிகளில் தொடர்ச்சியாக பெறப்பட்ட ஏழு தோல்விகளுக்கு முடிவு கட்டியதோடு, பிரேமதாஸ மைதானத்தில் சாதனை இலக்கான 175 ஓட்டங்களைத் துரத்தியடித்து அசத்தியிருக்கின்றது.

சந்திமாலின் துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பு சிறப்பாக இல்லாதவிடத்திலும் அற்புதமான அணித்தலைமை மூலம் இலங்கை அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றார்.

ஆட்ட நாயகன் விருதை குசல் பெரேரா பெற்றுக்கொண்டார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.