Afghanistan

உலகக்கிண்ண தகுதியைப் பெறுமா மேற்கிந்தியா???

2019 உலகக் கிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டிகள் இன்று சிம்பாப்வேயில் ஆரம்பமாகின்றன. தகுதிகாண் போட்டிகளில் மொத்தம் 10 அணிகள் பங்குபற்றும் அதேவேளை முதல் இரண்டு இடங்களையும் பிடிக்கும் அணிகள் மட்டுமே உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறும்.

இரண்டு குழுக்களாக முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று பின்னர் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன. குழுஏ” யில் மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து, நெதர்லாந்து, பப்புவா நியூக்கினியா மற்றும் ஐக்கிய அரபு ராட்சியம் ஆகிய அணிகளும் “பி” குழுவில் ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே, நேபாளம், ஸ்கொட்லாந்து மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகளும் மோதவுள்ளன.

உலகக்கிண்ண தகுதியைப் பெறுவதில் ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து ஆகிய நான்கு அணிகளிடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

தொடர்ந்து அசத்திவரும் ஆப்கானிஸ்தான் மற்றும் பலமான மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளே எதிர்பார்க்கப்பட்டாலும் சொந்த நாட்டில் களம்காணும் சிம்பாப்வேயும் தனது இடத்தை தக்கவைக்க கடுமையாகப் போராடும் என்பதில் ஐயமில்லை.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.