Home

கால்பந்து உலககிண்ணம்- நெய்மார் விளையாடுவாரா பிரேசில் மருத்துவர் தகவல்.

கால்பந்து உலககிண்ணம்- நெய்மார் விளையாடுவாரா பிரேசில் மருத்துவர் தகவல்.

பிரபல கால்பந்து வீரரான பிரேசிலின் நெய்மார், உபாதை காரணமாக 6 முதல் 8 வாரங்கள் போட்டிகளில் விளையாட முடியாது என்று செய்திகள் வெளியாகின.

அவரது தந்தையரை மேற்கோள்காட்டி BBC குறித்த செய்தியை நேற்று வெளியிட்டது.

பிரேசில் தேசிய அணிக்காகவும், பாரிஸ் சென்ட் ஜேர்மன் அணிக்காக கழக மட்ட போட்டிகளிலும் விளையாடிவரும் நெய்மாருக்கு அண்மையில் கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

இதன்காரணத்தால் வருகின்ற செவாய்க்கிழமை இடம்பெறவுள்ள சாம்பியன்ஸ் கிண்ண தொடரின் காலிறுதிக்கு முன்னைய சுற்று போட்டியில் விளையாட முடியாமல் போயுள்ளது.

பார்சிலோனா கழகத்துக்காக விளையாடிவந்த நெய்மாரை, பாரிஸ் சென்ட் ஜேர்மன் கழகம், 200 மில்லியன் யூரோக்கள் எனும் உலக சாதனை தொகைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்பந்தம் செய்தது.

நெய்மார் அதன்பின்னர் பாரிஸ் சென்ட் ஜேர்மன் கழகத்துக்காக 30 போட்டிகளில் 29 கோல்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவரது கணுக்காலில் உபாதை ஏற்பட்டுள்ளதால், அவருக்கு நாளைய தினம் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக இன்றைய தினம் செய்திகள் வெளியாகியுள்ளன.

பாரிஸ் சென்ட் ஜெர்மன் அணிக்காக கழக மட்ட போட்டிகளில் விளையாடி உபாதைக்குள்ளான 26 வயதான நெய்மார்,பாரிஸிலிருந்து விமானத்தில் வந்திறங்கி சக்கர நாற்காலியில் நகரும் புகைப்படங்களும் அதிகம் சமூக வலைத்தளத்தில் வலம்வந்திருந்தன.

இந்தநிலையில் இவருக்கு ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக குறைந்தது 3 மாதங்களாவது நெய்மார் ஓய்வில் இருக்க வேண்டும் என்பதை பிரேசில் கால்பந்து அணியின் மருத்துவர் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.