Sri Lanka

சுதந்திரக் கிண்ண அணி அறிவிப்பு, டிக்வெல்லவிற்கு அணியில் இடமில்லை..!!

இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ள ‘நிதஹாஸ் கிண்ண’ தொடருக்கான இலங்கை அணியின் இறுதி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அணியின் தலைவராக சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளதுடன், உதவி தலைவராக சுரங்க லக்மால் நியமிக்கபட்டுள்ளார்.

இளம் நட்சத்திர வீரர் நிரோஷன் டிக்வெல்ல அணியிலிருந்து நீக்கப்பட்ட அதேவேளை இருபதுக்கு இருபது போட்டிகளில் பெரிதளவில் சோபிக்காத நுவான் பிரதீப் மற்றும் உபுல் தரங்க ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

அணி விபரம்

தினேஷ் சந்திமால்

உப்புல் தரங்க

தனுஷ்க குணதிலக

குசல் மெண்டிஸ்

தசுன் சானக

குசல் ஜனித் பெரேரா

திசார பெரேரா

ஜீவன் மெண்டிஸ்

சுரங்க லக்மால்

இசுறு உதான

அகில தனஞ்சய

அமில அபோன்சோ

நுவான் பிரதீப்

துஷ்மந்த சமீர

தனஞ்சய டி சில்வா

நேற்றைய தினம் உத்தேச 20 பேர் கொண்ட விபரம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இறுதி அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.