Home

இலங்கையின் வெற்றிக்கான காரணம்-பயிற்சியாளர் கருத்து.

இலங்கையின் வெற்றிக்கான காரணம்-பயிற்சியாளர் கருத்து.
இலங்கை கிரிக்கெட் அணியின் பங்களாதேஷ் சுற்றுலாவில் ஈட்டப்பட்ட வெற்றிகள் புதிய நம்பிக்கையையும், இலங்கை கிரிக்கெட் அணியின் எழுச்சிக்கான அடித்தளமாகவும் அமைவதாக கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படும் சந்திக்க ஹத்துருசிங்க இந்த கருத்தை நேற்றைய ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் சுற்றுலாவை வெற்றியுடன் நிறைவு செய்துகொண்டு நாடு திரும்பிய இலங்கை வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று மாலை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைமையகத்தில் இடம்பெற்றபோதே ஹத்துருசிங்க  மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நல்ல தொடர்பாடலும் , தந்திரோபாய நெகிழ்வுத்தன்மையும் , மற்றும் நெருக்கடியற்ற சூழ்நிலைகளும் அணியின் வெற்றிக்கு  முக்கிய கூறுகளாக அமைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு விதமான போட்டிகளுக்கு மாத்திரமல்லாமல் ,களநிலைகளுக்கு ஏற்றவகையில் அணியின் கடடமைப்புக்களில் மாற்றங்களைக் கொண்டுவந்து, உதிரி வீரர்களின் பலத்தை மேலோங்க செய்வதன் மூலம் அணியை மென்மேலும் வெற்றியின்பால் இட்டு செல்லலாம் எனவும்   ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.