Sri Lanka

இலங்கை ஆச்சரியங்களை நிகழ்த்தும்-சஞ்சய் மஞ்சரேக்கர்

இலங்கை ஆச்சரியங்களை நிகழ்த்தும்-சஞ்சய் மஞ்சரேக்கர்

இலங்கையில் இடம்பெறவுள்ள முத்தரப்பு இருபதுக்கு இருபது தொடரின் போது இலங்கை கிரிக்கெட் அணி ஆச்சரியங்களை நிகழ்த்தும் என்று கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பிரபல வர்ணனையாளருமான சஞ்சேய் மஞ்சரேக்கர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.

இலங்கையின் புதிய தலைமை பயிற்சியாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட ஹத்துருசிங்க தலைமையில் இலங்கை அணி வெற்றிப்பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது.

இதனடிப்படையில் அடுத்தமாதம் இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆரம்பமாகவுள்ள சுதந்திர கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி ஆச்சரியங்களை நிகழ்த்தும் என்று தெரிவித்துள்ளார்.

இறுதியாக இலங்கை மண்ணில் இடம்பெற்ற இந்திய அணியுடனான தொடரின் போது அனைத்து வகையான ஆட்டங்களிலும் இலங்கை 9-௦ என்று தோல்வி கண்டது.

ஆயினும் இப்போதைய இலங்கை அணி அதிலிருந்து விடுபட்டு ஆச்சரியங்களை நிகழ்த்தவல்ல அணியாக மாறியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை ,இந்திய,பங்களாதேஷ் அணிகள் பங்கேற்கவுள்ள சுதந்திர கிண்ண முத்தரப்பு தொடர் அடுத்த மாதம் 6 ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.