South Africa

தென் ஆபிரிக்க அணித்தலைமை குறித்து விமர்சனம்

தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைவராக இளம் வீரர் எயிடன் மார்க்ரமை நியமித்தது பொருத்தமான முடிவல்ல என்று கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கிராம் ஸ்மித் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். வெறுமனே இரண்டு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடிய எயிடன் மார்க்ரம், இந்தியாவுடனான தொடரின்போது அணியின் நிரந்தர தலைவர் பிளஸ்ஸிஸ்க்கு ஏற்பட்ட உபாதை காரணமாக திடீரென தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதன் பின்னர் அந்த அணி சொந்த மண்ணில் இடம்பெற்ற ஒருநாள் தொடரை 1-5 எனும் கணக்கில் பறிகொடுத்தது. இதற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே கிராம் ஸ்மித் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.