Bangladesh

பங்களாதேஷ் அணியை துவம்சம் செய்து T20 தொடரை வென்றது இலங்கை.

பங்களாதேஷ் அணியை துவம்சம் செய்து T20 தொடரை வென்றது இலங்கை.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியிலும் வெற்றிபெற்ற இலங்கை அணி தொடரை வென்று சாதித்தது.

பங்களாதேஷ் சுற்றுலாவை மேற்கொண்ட இலங்கை அணி இன்று இரண்டாவது போட்டியில் விளையாடியது.

முதலில் ஆடிய இலங்கை அணிக்கு ஆரம்ப வீரர் குசல் மெண்டிஸ் மீண்டும் அதிரடி நிகழ்த்த இலங்கை அணி இருபது ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 210 ஓட்டங்களை குவித்தது.

பதிலுக்கு ஆடிய பங்களாதேஷ் அணி இலங்கையின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாது 18.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 135 ஓட்டங்கள் பெற்று ஆட்டம் இழந்தது.

இன்றைய போட்டியில் 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இலங்கை அணி இருபதுக்கு இருபது தொடரை 2-0 என்று கைப்பற்றி சாதித்தது.

போட்டியில் ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் குசல் மெண்டிஸ் தேர்வானார்.

பங்களாதேஷ் முக்கோண தொடர், அதன் பின்னர் டெஸ்ட் தொடரை 1-0 என்றும் வெற்றிகொண்ட இலங்கை அணி T20 தொடரையும் 2-0 என்று வெற்றிகொண்டமை சிறப்பம்சமாகும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.