Home

சிக்கலில் ரபாடா

சிக்கலில் ரபாடா.
ஒழுக்காற்றுப் பிரச்சனைகளில் சிக்கிய இரண்டு கிரிக்கெட்  வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராத தொகையுடன் கூடியதான நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக அறிவித்துள்ளது.
இந்திய மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான நேற்றைய 5 வது ஒருநாள் போட்டியின் போது, தென் ஆபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிஸோ ரபாடவுக்கு 15  சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய வீரர் சிக்கார் டவானை ஆட்டமிழக்க செய்த பின்னர் , ரபாடா மைதானத்தில் நடந்துகொண்ட விதம் தொடர்பிலேயே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அவரது குறித்த நடவடிக்கை காரணமாக, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கான புள்ளி ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை 5 ஒழுக்காற்று புள்ளிகள் பெற்றுள்ள ரபாடா , அடுத்துவரவுள்ள 24  மாதங்களுக்குள் மேலும் 3 ஒழுக்காற்றுப் புள்ளிகளை பெற்றுக்கொள்வாராயின், அவருக்கு 2 டெஸ்ட் போட்டிகளுக்கான தடை விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்தோடு சிம்பாவே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் சிம்பாவே வீரர் சிக்காண்டர் ராசாவுக்கும் இதேவிதமான  ஒழுக்காற்று பிரச்சனை காரணமாக 15  சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.