Home

தென் ஆப்பிரிக்கா மண்ணில் வரலாறு படைத்தது இந்தியா

தென் ஆப்பிரிக்கா மண்ணில் வரலாறு படைத்தது இந்தியா…!

இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இன்றைய 5 வது போட்டியில் வெற்றிப்பெற்று இந்திய அணி வரலாறு படைத்துள்ளது.

போர்ட்எலிசபத் மைதானத்தில் நிறைவுக்கு வந்த இன்றைய போட்டியில் இந்திய அணி 72 ஒட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

நாணய சுழற்ச்சியில் வெற்றிப்பெற்று தென் ஆப்பிரிக்கா அணித்தலைவர் மார்க்ராம் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை இந்தியாவுக்கு வழங்கினார்.

அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் சதத்தின் துணையுடன் 274 ஓட்டங்கள் குவித்தது.

பதிலுக்கு ஆடிய தென் ஆப்பிரிக்கா அனி 42.1 ஓவர்கள் நிறைவில் 201 ஓட்டங்கள் மாத்திரமே பெற்று 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இதன்மூலம் ஒருபோட்டி மீதமுள்ள நிலையில் 4-1 என்ற கணக்கில் ஒரு ஒருநாள் தொடரை வென்று புதிய சரித்திரம் படைத்து அசத்தியது கோஹ்லி தலைமையிலான இந்திய அணி.

ஆட்ட நாயகன் விருதை ரோஹித் சர்மா பெற்றுக்கொண்டார்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.