Home

கராச்சியில் மீண்டும் கிரிக்கெட் திருவிழா.

கராச்சியில் மீண்டும் கிரிக்கெட் திருவிழா.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையால் நடத்தப்படும்  பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளின் இறுதி போட்டியை கராச்சியில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நேற்றைய நாளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்த விசேட குழுவினர், அதுதொடர்பிலான அறிக்கையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையிடம் கையளித்துள்ளனர்.
அதன்படி அதிகமாக எதிர்வரும் மார்ச் 25  ம் திகதி பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி தொடரின் இறுதி போட்டி கராச்சியில்  இடம்பெற வாய்ப்புள்ளதாக அறியவருகின்றது.
குறித்த தொடர் பெப்ரவரி மாதம் 22  ம் திகதி ஐக்கிய அரபு ராட்சசியத்தில் ஆரம்பிக்கவுள்ளது, அதன்பின்னர் Play off போட்டிகள் இரண்டும் மற்றும் இறுதி போட்டியும் கராச்சியில் இடம்பெறவுள்ளது.
2009  பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் கராச்சியில் எதுவித கிரிக்கெட் போட்டிகளும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.