Sri Lanka

இலங்கை அணியின் இளம் வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் 104 உள்ளூர் வீரர்களுக்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.

2017/2018 ம் பருவ காலத்தை கருத்தில்கொண்டு இவர்களது செயல்பாடுகளுக்காக 85 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அணிக்காக கடந்த காலங்களில் விளையாடிய 15 சிரேஷ்ட வீரர்களும், அண்மைக்காலம் இலங்கை தேசிய அணியில் இடம்பெற்றிருந்தும் தேசிய வீரர்களுக்கான ஒப்பந்தத்தில் சேர்த்துக்கொள்ளப்படாதா 17 வீரர்களும், வளர்ந்துவரும் வீரர்கள் எனும் அடிப்படையில் 23 வீரர்களும், முதல்தர போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய 20 வீரர்களும் 19 வயதுக்குட்பட்ட 29 வீரர்களும் இதிலே உள்ளடங்குகின்றனர்.

சுராஜ் ரண்டீவ், சமிந்த எரங்க , பார்வீஸ் மஹரூப், ஜீவன் மெண்டிஸ், தரங்க பரணவிதான, நுவான் குலசேகர, மஹேல உடவத்த , சச்சித்ர சேனநாயக்க, சாமர சில்வா உள்ளிட்டோர் சிரேஷ்ட வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.