Sri Lanka

பங்களாதேஷை சந்திக்கவுள்ள இலங்கை T20 அணி அறிவிப்பு.

பங்களாதேஷை சந்திக்கவுள்ள இலங்கை T20 அணி அறிவிப்பு.

பங்களாதேஷ் அணிக்கெதிராக இலங்கை அணி பங்கேற்கவுள்ள 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரின் தலைமைத்துவம் சந்திமாலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கான இலங்கை அணியின் தலைவராக செயல்படும் மத்தியூஸ், உபாதை காரணமாக பங்களாதேஷ் சுற்றுலாவிலிருந்து வெளியேறியுள்ள நிலையிலேயே சந்திமாலிடம் தலைமைத்துவம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டிகளுக்கான தலைவராக மட்டுமே செயல்படும் சந்திமால் ,மத்தியூஸின் விலகல் காரணமாக முக்கோண தொடரில் இலங்கை அணியை வழிநடத்தியிருந்தார்.

பங்களாதேஷ், இலங்கை அணிகளுக்குடையிலான குறித்த இருபதுக்கு இருபது தொடர் எதிர்வரும் 15 மற்றும் 18 ம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

இன்று அறிவிக்கப்பட்டுள்ள அணியில் சந்திமால் தலைமையில்
உப்புல் தரங்க
தனுஷ்க குணதிலக
குசல் ஜனித்த பெரேரா
திசார பெரேரா
அசேல குணரத்ன
நிரோஷன் டிக்வெல்ல
தசுன் ஷானக
இசுரு உதான
ஷெஹான் மதுஷங்க
ஜெப்ரி வண்டெர்சி
அகில தனஞ்சய
அமில அபோன்சோ
ஜீவன் மெண்டிஸ்
அசித்த பெர்னாண்டோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.