South Africa

குயிண்டன் டி கொக் வெளியேற்றம்

தென் ஆபிரிக்க அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரரும் அணியின் விக்கெட் காப்பாளருமான குயிண்டன் டி கொக் காயம் காரணமாக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இந்திய அணி, 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.

முதலிரு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ள தென் ஆபிரிக்க அணிக்கு, குயிண்டன் டி கொக் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளமை பாதிப்பாக அமையவுள்ளது.

ஏற்கனவே முக்கிய வீரர்களான டி வில்லியர்ஸ் மற்றும் பாப் டு பிளஸ்சில் ஆகியோர் உபாதை காரணமாக விளையாடாத நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு இவரது வெளியேற்றமும் நெருக்கடியை அதிகரித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.