Sri Lanka

இலங்கை மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் போட்டி

இலங்கை கிரிக்கெட் அணியின் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுலாவின் போட்டி அட்டவணை விபரத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்  வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் ஆரம்பிக்கவுள்ள குறித்த தொடரில் ஒரு பகலிரவு டெஸ்ட் அடங்கலாக 3 டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

மே மாதம் 30 ம் திகதி ஆரம்பிக்கும் சுற்றுலாவில் 3 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியை தொடர்ந்து, குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் எதிர்வரும் ஜூன் 6 ம் திகதி முதல் டெஸ்ட் போட்டியும், டர்ரன் சாமி கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 14 ம் திகதி 2 வது டெஸ்ட் போட்டியும் இடம்பெறவுள்ளன.

அத்தோடு தொடரின் இறுதிபோட்டி பகலிரவு ஆட்டமாக கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 23 ம் திகதியும் ஆரம்பிக்கும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.