England

ஒருநாள் போட்டிகளில் தடம்பதிக்க தவறும் ஆஸ்திரேலியா

ஒருநாள் போட்டிகளில் தடம்பதிக்க தவறும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா அணி உலகக் கிரிக்கெட் அரங்கில் நீண்டகால வல்லரசன். ஐந்து உலகக் கோப்பைகளை வென்ற ஒரே நாடு. ஒருநாள் போட்டிகளின் நடப்பு சம்பியன்கள். உலகின் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளிலும் தமக்கென ஓர் முத்திரை பதித்த நாடாகக் திகழ்கிறது இந்த ஆஸ்திரேலியா. எந்த காலகட்டத்திலும் ஆஸ்திரேலிய அணி சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களையும் அதே அணியில் உலகத்தரம் வாய்ந்த துடுப்பாட்டக்காரர்களையும் கொண்டிருக்கும் ஓர் தனித்துவமான அணியாகவே இருந்து வந்திருக்கிறது. இப்பொழுது இருக்கின்ற ஆஸ்திரேலிய அணியிலும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களும், மட்டையாளர்களும் இருக்க தான் செய்கிறார்கள். ஆனாலும் அண்மைக்காலமாக டெஸ்ட் போட்டிகளில் அசத்திவரும் இந்த ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டிகளில் தடம்பதிக்க தவறிவருகிறது என்றால் மறுப்பதற்கில்லை.ஆம் 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா, இங்கிலாந்து அணிகளோடும்அதோடு மினி உலகக் கிண்ணம் போன்ற ஒருநாள் தொடர்களில் ஆடியுள்ள ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரை மாத்திரமே வென்றிருக்கிறது. அடுத்த உலகக்கிண்ணத்திற்கு இன்னும் ஒரு வருட காலமே இருக்கின்ற நிலையில் நடப்பு சம்பியன்கள் என்ற கணக்கில் ஆஸ்திரேலிய இரசிகர்களுக்கும், கிரிக்கெட் இரசிகர்களுக்கும் இது கவலை அளிக்கக்கூடிய விடயமே.

ஒவ்வொரு நாடும் தமக்கென ஒரு style இல் ஆடுவார்கள். அதனை brand of cricket என்று கிரிக்கெட் வழக்கில் சொல்வது வழக்கம். அதில் இந்த ஆஸ்திரேலியர்கள் fearless cricket அதாவது பயமேதுமின்றி ஆடுவதையே அவர்களது style ஆக கொண்டவர்கள். இதனை இன்னும் விளக்கமாக சொல்வதென்றால்,
எந்த அணியும் விக்கெட்கள் தொடர்ந்து விழும் சந்தர்ப்பங்களில் அந்த இன்னிங்ஸ் முழுவதும் மிகவும் நிதானமாகவே ஆடும். ஆனால் ஆஸ்திரேலியர்கள் விக்கெட் விழும் சந்தர்ப்பங்களிலும் ஒரு வீரர் சிறிது நேரம் களத்தில் நிலை கொண்டால் மீண்டும் அதிரடியாகவே ஆடுவர். அதிகளவான சந்தர்ப்பங்களில் இது அவர்களுக்கு கைகொடுத்து தான் வந்திருக்கிறது. காரணம் இவ்வாறான ஆட்டங்களில் ஒரு வீரர் சிறப்பாக ஆடி விட்டாலே சிறப்பான ஓர் ஓட்ட எண்ணிக்கையை எட்டி விட முடியும். ஆஸ்திரேலியர்களின் பந்துவீச்சு பலம் அந்த ஓட்ட எண்ணிக்கைக்குள் எதிரணியை கட்டுப்படுத்த போதுமானது. நவீன கிரிக்கெட்டில் ஏனைய அணிகளும் தற்போது சிறப்பான துடுப்பாட்ட வரிசைகளை கொண்டுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணியும் பெரியளவில் ஓட்டங்களை குவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அத்தோடு இப்போது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு வீரரின் பலம்,பலவீனம் அவரை கையாள வேண்டிய வழிகள் என்பன மிக இலகுவாக ஆராயப்படும் நிலையில் இந்த aggressive cricket அதாவது இந்த fearless ஆட்டமே ஆஸ்திரேலியர்களுக்கான முதல் எதிரியாக மாறியுள்ளது என்றே சொல்ல வேண்டும். Aggressive ஆக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவிக்க வேண்டும் என்றால் அந்த மட்டையாளர் பந்துவீச்சாளர்கள் மீது ஆதிக்கம் செலுத்தினால் மாத்திரமே சாத்தியம். அதாவது reading bowler’s mindset இருக்க வேண்டும். பந்துவீச்சாளர்கள் ஐ பூரணமாக புரிந்து கொண்டு ஆட வேண்டும். சிறிய பிழை கூட அந்த விக்கெட் ஐ எதிரணிக்கு தாரை வார்த்து விடும். நவீன கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களும் தமது நுணுக்கங்களை புதிதாக மேம்படுத்தி பந்துவீசி வருவது இந்த aggressive ஆட்டத்தை பெருமளவில் கட்டுப்படுத்தி தான் இருக்கிறது என்றால் மிகையாகாது. அண்மைய நாட்களில் (2017) நடந்த பலமான அணிகளுக்கிடையிலான எந்த தொடரிலும் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கைகள் பதிவுசெய்யப்படுவது கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்து வருவதை கிரிக்கெட் இரசிகர்களாகிய நீங்கள் கவனிக்க தவறியிருக்க மாட்டீர்கள் என நம்பலாம். எனவே ஆஸ்திரேலியா தொடர்ந்தும் இதே பாணியில் ஆட வேண்டும் என்றால் பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே ஆட வேண்டும் என்றே எண்ண தோன்றுகிறது.

முதலாவது விசயம். மற்றைய அணிகளை விட ஆஸ்திரேலிய அணி முதலாவது விக்கெட் இணை எப்பொழுதும் அதிரடியான ஆரம்பத்தை வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் அணி. அதை தான் flying start என்பார்கள். இவ்வாறு எந்த ஆஸ்திரேலிய அணியின் ஆரம்ப ஆட்டக்காரர்கள் இருவருமே அதிரடியில் வெளுத்து வாங்குபவர்களே. இப்போது இருக்கும் வோர்னர்,பிஞ்ச் ஜோடியும் அதிரடியில் சளைத்தவர்கள் அல்ல. எனவே அதிரடி ஆரம்பத்தில் குறை ஏதும் இருக்க போவதில்லை.

அடுத்து மூன்றாம் இலக்க ஆட்டக்காரர். அனைத்து நாடுகளிலும் சிறப்பான துடுப்பாட்ட வீரன் ஆடும் இடம் என்றே சொல்லலாம். ஹோலி,வில்லியம்சன்,ரூட்,டு ப்ளஸிஸ் என அந்த பட்டியலில் இருப்பவர்கள் அனைவரும் அற்புதமான ஆட்டக்காரர்கள். ஆஸ்திரேலிய அணியிலும் அதன் சிறந்த துடுப்பாட்ட வீரர் ஸ்மித் தானே ஆடுகிறார் என்ற கேள்வி எழலாம். உண்மை தான் என்றாலும் கடந்த ஆஸ்திரேலிய-இங்கிலாந்து தொடரை முழுமையாக பார்த்திருப்பீர்கள் என்றால் நீங்களும் நான் சொல்ல போகும் கருத்துடன் ஒத்து போவீர்கள். இந்த தொடரில் மாத்திரம் ஸ்டோக்ஸ் இல்லாத காரணத்தால் நான்காம் இலக்கத்தில் ஆடினார் ரூட். ஆனாலும் வழக்கமான தனது ஆட்டத்தையே ஆடினார். மூன்றாம் இலக்க ஆட்டக்காரர் அணியின் முதுகெலும்பே,இந்த வீரர் அந்த போட்டியில் கூடியளவு நேரத்தை ஆடுகளத்தில் செலவழிக்க வேண்டிய வீரராக இருக்கவேண்டும். இங்கு தான் ஸ்மித் பிழை விடுகிறார் எனலாம். பொறுப்பாகவும்,இலகுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு விரட்டியும் ஓட்டங்களை பெற்றுக்கொண்டு மற்ற வீரர்களுடன் இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி ஆட வேண்டிய ஸ்மித் இந்த தொடர் முழுவதும் அநியாயத்திற்கு அவசரப்பட்டு ஆட்டமிழந்து வெளியேறினார். இங்கு தான் ரூட் தெளிவாக இருந்தார் டெஸ்ட் தொடரில் சொதப்பியவர் பொறுப்புணர்ந்து ஒரு நாள் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடி அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஸ்மித் உம் இதுபோன்ற long innings ஆட தொடங்குவாராயின் ஆஸ்திரேலியர்களிடம் இருந்து எதிரணியை காப்பாற்றுவது கடினமே.

துடுப்பாட்ட வரிசையில் சோதிப்புகள். இன்னும் ஆஸ்திரேலிய அணி ஒரு ஸ்திரமான துடுப்பாட்ட வரிசையை உருவாக்கி முடிந்தபாடில்லை. ஒவ்வொரு தொடரிலும் புதிய துடுப்பாட்ட வீரர்களையும், துடுப்பாட்ட வரிசையையும் மாற்றி பரிசோதனைகளை மேற்கொண்ட வண்ணமே இருக்கிறது. மூன்றாம் இலக்கம் போலவே ஐம்பது ஓவர் போட்டிகளில் நான்காம் இலக்க ஆட்டக்காரரும் முக்கியமானவர். கடந்த காலங்களில் பெய்லி,மக்ஸ்வெல், ஹெட், இந்த தொடரில் மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கேமரூன் வைட் என மாற்றிய வண்ணமே இருக்கிறது. ஆனால் எவரும் கைகொடுத்ததாக தெரியவில்லை. நான்காம் இலக்கத்திற்கு பொருத்தமான துடுப்பாட்ட வீரரை இன்னும் ஆஸ்திரேலிய கண்டுபிடிக்காமல் இருப்பது கவலையே.

விக்கெட் காப்பாளர்கள் வேட் அல்லது பெய்ன் இவர்கள் இருவரில் யார் என்றாலும் இறுதி நேரத்தில் பொறுப்பான துடுப்பாட்டத்தை வழங்க கூடியவர்கள் என்பதால் ஐந்து அல்லது ஆறாம் இலக்கத்தில் அதிரடியில் கலக்க கூடிய மக்ஸ்வெல் இருப்பது அணிக்கு பலம் சேர்க்கும். துணைக்கண்ட மைதானங்களில் மக்ஸ்வெல் சுழல்பந்துவீச்சிலும் கைகொடுப்பார்.
வட்சனிற்கு பிறகு சிறந்த சகலதுறை வீரர் ஒருவர் இல்லாமல் தவித்து வந்தது ஆஸ்திரேலியா. அடுத்த உலகக்கிண்ணம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள நிலையில் வேகப்பந்து வீச கூடிய சகலதுறை வீரரே தேவைப்படுகிறார். அண்மைக்காலமாக அந்த பணியை ஸ்டொய்னிஸ் சிறப்பாகவே செய்து வருகிறார். அத்தோடு மத்திய வரிசையில் இறங்கி அதிரடியாகவும் ஆடக்கூடியவர் என்பது கூடுதல் பலம்.

ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு பலமாக தான் இருக்கிறது. ஆனால் ஆரம்ப விக்கெட்களை வீழ்த்துவதில் சிரமத்தை எதிர்நோக்குகிறது. இங்கிலாந்து மைதானங்கள் வேகத்தோடு, ஸ்விங் உம் ஆவதால் இவர்கள் அங்கு அசத்தலாம். ஆனாலும் ஹசல் வூட் ஐ விட ஹொல்டர் நைல் சிறந்த தெரிவாக இருப்பார். மூன்றாம்,நான்காம் இலக்க துடுப்பாட்ட வீரர்கள் கைகொடுப்பார்கள் எனின் ஆஸ்திரேலியர்கள் மீண்டும் அசத்துவர்.

மறு முனையில் இங்கிலாந்து அணி சத்தமில்லாமல் சாதித்துக்கொண்டு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இங்கிலாந்து அணி 4-0 என்று ஆசஸ் தொடரை இழந்த நிலையில் ஒருநாள் தொடரில் எழுச்சி கண்டு தொடரை 4-1 என்று கைப்பற்றியது கிரிக்கெட் இரசிகர்களை ஆச்சர்யப்படுத்த தவறவில்லை என்றாலும் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. இங்கிலாந்து அணி 2016 இற்கு பின்னர் விளையாடியுள்ள ஒன்பது தொடர்களில் எட்டு தொடர்களை வென்றிருக்கிறது என்பதே உண்மை. அந்த ஒரே தோல்வியும் இந்திய அணிக்கு எதிராக இந்திய மண்ணில் பெறப்பட்ட தோல்வியே. அதற்கு மன்னிப்பு வழங்கலாம். காரணம் இந்திய மண்ணில் வைத்து இந்திய அணியை ஒரு தொடரில் வீழ்த்துவது என்பது இயலாத காரியம். அடுத்த உலகக்கிண்ணம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள நிலையில் அடுத்த உலகக்கிண்ணத் தொடரிற்கான முதன்மை தெரிவுகளில் ஒன்றாக மாறியுள்ளது இங்கிலாந்து என்றே சொல்லலாம். கடந்த இரண்டு உலகக்கிண்ணங்களையும் போட்டியை நடாத்திய நாடே கைப்பற்றி உள்ள நிலையில் தமது முதலாவது உலகக்கிண்ணத்தை கைப்பற்ற கிரிக்கெட்டின் தாயகம் முழுமூச்சுடன் முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆரம்ப ஜோடி ரோய்,ஹேல்ஸ் இருவருமே அதிரடி ஆட்டக்காரர்கள். இருவரில் ஒருவர் தவறினாலும் மற்றையவர் சொந்த மைதானங்களில் போட்டு தாக்குவர் என்பது திண்ணம். அடுத்து ரூட், இந்த தொடரிலேயே தனது பங்களிப்பை உறுதி செய்தார். அடுத்து அணித்தலைவர் மோர்கன். இந்த தொடரில் போர்ம் இல்லாமல் தடுமாறினார். போர்ம் க்கு திரும்பும் பட்சத்தில் இன்னும் பலமே. அடுத்து இந்த தொடரில் ஆடாத தற்போது இருப்பவர்களில் சிறப்பான சகலதுறை ஆட்டக்காரர் ஸ்டோக்ஸ். சட்ட சிக்கல்களால் அணியில் இடம்பெறாத இவர் அடுத்தடுத்த தொடர்களில் இடம்பெறுவார் என நம்பலாம். அடுத்து விக்கெட் காப்பாளர் பட்லர். இறுதி நேர அதிரடியில் வெளுத்து வாங்குபவர்களில் ஒருவர். இங்கிலாந்து மைதானங்களில் சிறந்த பெறுபேறுகளை கொடுப்பார். வரிசையில் அடுத்தவர் மொயின் அலி. அதிரடியாக ஆடக்கூடியவர். ஓரளவு சிறப்பாக இங்கிலாந்து மைதானங்கள் என்றால் இன்னும் சிறப்பாக சுழல்பந்து வீச கூடியவர்.
அடுத்தவர் கிரிஸ் வோக்ஸ். இவர் ஒரு bowling all rounder எனலாம். அதாவது சிறப்பாக பந்து வீசக்கூடியவரும்,ஓரளவு துடுப்பெடுத்தாடவும் கூடிய ஆட்டக்காரர். இந்த தொடரிலும் தன்னை நிரூபித்திருந்தார்.

அடுத்து இங்கிலாந்தின் பந்துவீச்சு அதன் மண்ணில் இன்னும் பலமாகவே இருக்கும். ப்ளங்கட், மார்க் வூட், இந்த தொடரில் அறிமுகம் வழங்கப்பட்ட இங்கிலாந்து உள்ளூர் நாயகன் ரொம் குர்ரான், சுழல் பந்து வீச்சாளர் ரசீட் என பந்துவீச்சு பலமாகவே இருக்கிறது.

அத்தோடு இந்த பந்துவீச்சாளர்கள் அனைவரும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளிலேயே ஆடுவது இன்னும் பலம். தற்போது இருக்கும் நிலையில் உலகக்கிண்ணத்திற்கான complete package ஆக தயார்நிலையில் இருப்பது இங்கிலாந்து மாத்திரமே. முதலாவது உலகக்கிண்ணத்தை தம்வசப்படுத்துவார்களா இங்கிலாந்து வீரர்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.

#தேவதாஸ்_பிரசன்னா

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.