Bangladesh

வங்கப்புலிகளை வேட்டையாடிய சிங்கங்கள்…!

வங்கப்புலிகளை வேட்டையாடிய சிங்கங்கள்…!

பங்களாதேஷில் இடம்பெற்றுவரும் முக்கோண தொடரின் இன்று இடம்பெற்ற வாழ்வா சாவா போட்டியில் இலங்கை அணி வங்கப்புலிகளை வேட்டையாடி மகிழ்ந்துள்ளது.

நீண்ட நாட்களாக வெற்றியின் பாதையில் பயணிப்பதற்கு தடுமாறிவரும் இலங்கை அணி, இந்தாண்டில் அதற்கான மிக நல்ல அத்திவாரத்தை இன்றைய போட்டியில் பதித்துள்ளது.

இலங்கை அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாத பங்களாதேஷ் அணி, யாரும் எதிர்பாராத விதமாக 82 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

இலங்கையின் பந்துவீச்சில் லக்மால் 3 விக்கெட்களையும், துஷ்மந்த சமீர,திசார பெரேரா, சந்தகன் ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்களை கைப்பற்றினர்.

பதிலுக்கு 83 எனும் இலக்கு இலக்குடன் களமாடிய இலங்கை அணி 11.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

துடுப்பாட்டத்தில் தரங்க 39 ஓட்டங்களையும், குணதிலக 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இவ்விரு அணிகளும் மோதவுள்ள முக்கோண தொடரின் இறுதிப்போட்டி எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.