IPL - Indian Premier League

ஐபில் 2018 ஏலம் ஒரூ பார்வை

ஐபில் ஏலம் ஒரூ பார்வை

11ஆவது ஐ.பி.எல் போட்டிகளுக்கான அணிகளுக்கு வீரர்களை தெரியும் ஏலம் எதிர்வரும் 27,28 ஆம் திகதிகளில் பெங்களூரில் இடம்பெற காத்திருக்கிறது.

ஏற்கனவே அணிகள் சில வீரர்களை pre auction retention மூலம் தக்க வைத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் ஏனைய வீரர்களுக்கான ஏலமே இடம்பெற காத்திருக்கிறது.ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் தக்க வைக்கப்பட்டிருந்தாலும் சில எதிர்பாராத தக்கவைப்புகளும்,விடுவிப்புகளும் நிகழ்ந்திருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.

குறிப்பாக இன்னும் சர்வதேச போட்டிகளில் அறிமுகப்படுத்தப்படாத சப்ராஸ் கானின் தக்க வைப்பு மிகுந்த ஆச்சர்யத்தை பலருக்கு அளித்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றே சொல்லலாம். காரணம் பெங்களூர் அணியில் கெய்ல்,ராகுல்,கேதார் யாதவ் மற்றும் அண்மைக்காலமாக T-20 போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி வரும் சாகல் இவ்வளவு வீரர்களையும் கடந்து, சென்ற தொடரில் கூட அவ்வளவு வாய்ப்புகள் வழங்கப்படாத சப்ராஸ் கானின் தக்கவைப்பு ஆச்சர்யமே. அதனை அவர் நிவர்த்தி செய்வாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதே போன்ற ஒரு தக்கவைப்பை தான் Kings xi Punjab அணியும் மேற்கொண்டு இருக்கிறது என்றால் மிகையாகாது. மக்ஸ்வெல்,மில்லர் போன்ற அதிரடி ஆட்டக்காரர்களை தவிர்த்து அக்சார் பட்டேலுக்கான வாய்ப்பும் ஆச்சர்யமே.

இதில் எதிர்பார்க்கப்பட்டது போன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டோனி,ரெய்னா இருவரோடு ஜடேயாவையும் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா, பாண்டியா மற்றும் பும்ப்ரா சன்ரைசர்ஸ் அணி வோர்னர் மற்றும் புவனேஷ்வர் குமார் என தக்கவைப்புகளை நிகழ்த்தி இருக்கின்றன.

ஒவ்வொரு புதிய ஏலத்தின் போதும் அதிகத்தொகைக்குரிய வீரர் ஒருவர் அந்த தொகையை அதிகரித்தே சென்றிருக்கிறார்.இம்முறையும் அதிகரிப்பு நிச்சயம் என்பது திண்ணம்.இம்முறை ஏலத்தின் போது அதிகம் கவனிக்கப்பட வேண்டிய வீரர்கள் பற்றி பாக்கலாம்.

1.பென் ஸ்டோக்ஸ்-கடந்த ஆண்டு ஏலத்தின் போது பூனே அணியால் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர். வழமையான சந்தர்ப்பங்களில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் அந்தந்த தொடர்களில் சோபிக்காத நிலையில் ஸ்டோக்ஸ் சகலதுறைகளிலும் அசத்தி அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து சென்றது அவருக்கான விலையை இம்முறை அதிகரித்திருக்கிறது என்றே சொல்லலாம். ஆனால் அண்மைக்காலமாக இங்கிலாந்தில் bar ஒன்றில் கைகலப்பில் ஈடுபட்டார் என்று இன்னும் இங்கிலாந்து அணியில் உள்வாங்கப்படவில்லை என்றாலும் ஏனைய தொடர்களில் பங்கேற்க இங்கிலாந்து கிரிக்கெட் சபை அனுமதி அளித்திருக்கிறது.அத்தோடு சட்ட சிக்கல்களால் இவர் பங்கேற்க முடியாது போனால் மாற்று வீரரை இணைத்துக் கொள்ளலாம் என்று ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்திருப்பதால் இந்த வருட ஏலத்திலும் golden buy ஆக ஸ்டோக்ஸ் திகழ்வதற்குரிய வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது.

2.கொலின் முன்றோ-நியூசிலாந்து அணிக்காக ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களம் இறங்கி கிட்டத்தட்ட இரண்டு மாத இடைவெளிக்குள் மூன்று T-20 சதங்களை விளாசி இருப்பது அணி நிர்வாகங்களை அவர் பக்கம் திருப்பி இருக்கிறது எனலாம்.அதுவும் இந்திய அணிக்கு எதிராக ராஜ்கோட் மைதானத்தில் அடிக்கப்பட்ட சதம் இந்த ஏலத்தில் அவருக்கான இடத்தை உயர்த்தி இருக்கிறது என்று சொல்லலாம். கடந்த ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி இருந்தாலும் கொல்கத்தா அணியால் இவரை Right-to-Match card மூலம் இவரை பெற்றுக் கொள்ள முடியாது.காரணம் கொல்கத்தா அணி ஏற்கனவே தக்க வைத்திருக்கும் வீரர்கள் இருவருமே வெளிநாட்டு வீரர்கள். எனவே புதிதாக ஒரு அணியிலேயே முன்றோ இணைக்கப்பட போகிறார்.அது எந்த அணி,ஏலத்தொகை என்ன என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

3.கிறிஸ் லின்- கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக சில போட்டிகளில் ஆடி இருந்தார் இந்த ஆஸ்திரேலியாவின் அதிரடி புயல். காயம் காரணமாக விலகி இருந்தாலும் ஆடிய போட்டிகளில் எதிரணிக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தார். இம்முறை ஏலத்திலும் அதிக விலைக்கு போகலாம் இந்த அதிரடி நட்சத்திரம்.

4.ட்வைன் ப்ராவோ-மேற்கிந்தியத்தீவுகளின் சகலதுறை ஆட்டக்காரர். இறுதி நேரங்களில் நேர்த்தியாகவும் மிகத்துல்லியமாகவும் பந்துவீசக் கூடிய பந்துவீச்சாளர். களத்தில் சிறந்த களத்தடுப்பாளர். அதுமட்டுமல்ல நல்ல entertainer உம் கூட.இவரை Right-to-match மூலம் தக்க வைத்துக் கொள்ள கண்டிப்பாக சென்னை அணி முயலும் என்பதில் துளியும் ஐயமுமில்லை.இவருக்கான கிராக்கியும் அதிகம் தான்.

5.ரசீட் கான்- கடந்த ஆண்டு சன் ரைசர்ஸ் அணிக்காக சிறப்பாக ஆடி இருந்தார் இந்த ஆப்கானிஸ்தான் இளம் சுழல் மன்னன். சன் ரைசர்ஸ் அணி இவரை தக்க வைக்காமல் இருந்தது வியப்பே.ஆனால் கண்டிப்பாக Right-to-match மூலம் தக்க வைக்கப்படலாம். விக்கெட் வீழ்த்துவது மட்டும் அல்லாமல் T-20 போட்டிகளில் ஓட்டங்களை கட்டுப்படுத்தி பந்துவீசும் வீரர்களில் தற்போது முன்னிலையில் இருப்பவர். ஏலத்தின் போது கவனிக்கப்பட போகும் இன்னுமொருவர்.

6.கே.எல்.ராகுல்-கடந்த ஆண்டு பெங்களூர் அணியில் அதிரடி காட்டி இருந்தார். இவரை தக்கவைத்துக் கொள்ளாமல் ரசீட் கான் தக்கவைக்கப்பட்டது வியப்பின் உச்சியே. ஆரம்ப ஆட்டக்காரர்களில் அதிரடி காட்டக்கூடியவர். உள்ளூர் ஆட்டக்காரர் வேறு.அணி உரிமையாளர்களுக்கு வேறு என்ன வேண்டும். ஆனால் பெங்களூர் அணி Right-to-match retention க்கு முயல வேண்டும்.இந்தியர்களில் பெரும் விலை போவார்.

7.ஜொஸ் பட்லர்-இங்கிலாந்தின் அதிரடி ஆட்டக்காரர்.விக்கெட் காப்பாளரும் கூட. கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்பவீரராக ஆடினார். ஏற்கனவே pre auction retention இல் மும்பை அணி மூன்று உள்ளூர் வீரர்களை தக்க வைத்திருப்பதாலும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் என்பவற்றோடு பட்லரை Right-to-match retention மூலம் தக்க வைத்துக் கொள்ளலாம். எப்படியும் ஏலத்தின் போது ஒரு ரவுண்ட் வருவார்.

8.மிட்செல் ஸ்டார்க்- இதுவரை நடந்த ஐ.பி.எல் தொடர்கள் எதிலுமே வேகப்பந்து வீச்சாளர்களின் தாக்கம் அதிகளவில் இருந்ததில்லை. அப்படி ஆதிக்கம் செலுத்திய வேகப்பந்துவீச்சாளர்களை குறிப்பிட்டு சொல்லலாம். மலிங்க,தன்வீர்,ஸ்டார்க்,மோர்கல், புவனேஷ்வர் குமார் என அந்த பட்டியல் அவ்வளவு ஒண்டும் நீட்டமானதல்ல. இதில் மலிங்கவின் ஆதிக்கம் பல தொடர்களில் இருந்தது மறுக்க முடியாத உண்மை.ஆனால் அண்மைய தொடர்களில் மலிங்கவின் தாக்கம் பெரிதாக இருக்கவில்லை.ஆனால் இந்திய மைதானங்களிலும் ஓட்டங்களை கட்டுப்படுத்தி வீசுவதிலும்,ஜோக்கர் பந்துகளை அதிகம் வீசும் பந்துவீச்சாளர் வரிசையில் ஸ்டார்க் முன்னிலையில் இருப்பவர்.இம்முறை ஏலத்தில் அவருக்கான தொகை அதிகரித்தே இருக்கும்.இவரையும் right-to-match மூலம் தக்க வைத்துக் கொள்ள பெங்களூர் அணிக்கு சந்தர்ப்பம் இருக்கிறது.

9.கிளென் மக்ஸ்வெல்- T-20 போட்டிகளில் ஆறுகளை பறக்க விட்டு அணியின் ஓட்ட எண்ணிக்கையை ஜெட் வேகத்தில் ஏற்ற கூடிய வீரர்களில் முக்கியமானவர். ஒரு தொடரில் அதிக தொகைக்கு வாங்கி தொடர் முழுவதும் water boy ஆக பயன்படுத்தியது மும்பை அணி. அடுத்த தொடர்களிலேயே பஞ்சாப் அணியில் இணைந்தவர் வெளுத்து வாங்கினார்.ஆனால் கடந்த வருடம் ஏமாற்றினார். ஆனாலும் இவருக்கு இன்னும் மாக்கெட் இருப்பது இம்முறை ஏலத்தில் உறுதி செய்யப்படும்.பஞ்சாப் அணி மக்ஸ்வெல்,மில்லர் இருவரையும் right-to-match மூலம் தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கலாம்.

10.சாஹல்-இந்திய அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் அண்மைக்கால வெற்றிகளிற்கு சொந்தக்காரன். பெங்களூர் அணி இவரை தக்கவைத்துக் கொள்ளாமல் விட்டதும் ஆச்சர்யம் தான்.கடந்த தொடரில் பெங்களூர் அணிக்காக சிறப்பாக பந்துவீசி இருந்தார் சாஹல். இவரை பெங்களூர் அணி தக்க வைக்க முயற்சிக்குமாயின் ராகுல் அல்லது ஸ்டார்க் ஐ இழக்க நேரிடும். பொறுத்திருந்து பார்ப்போம் சாஸலுக்கான பெறுமதியை

11.வாஷிங்டன் சுந்தர்-இந்தப் பெயர் உங்களில் பலருக்கு ஆச்சர்யம் தரலாம்.கடந்த தொடரில் அஸ்வினுக்கு பதிலாக இடம்பெற்ற இந்த இளம்கன்று பலரையும் impress பண்ண தவறவில்லை.அத்தோடு உள்ளூர் T-20 தொடர்களில் பெறுபேறுகளும் வயதுக்கு மிஞ்சியே இருக்கிறது.அதனால் அண்மையில் இந்திய அணிக்கும் அழைக்கப்பட்டிருந்தார்.கண்டிப்பாக இவருக்கும் பெரிய தொகை காத்திருக்கிறது.

இது தவிர இந்திய அணியில் நிரந்தர இடங்களில் இருக்கும் தவான்,கேதார் ஜாதவ்,குல்தீப் ஜாதவ்,யுவராஜ்,முரளி விஜய்,ரஹானே,அஸ்வின் ஆகியோருக்கான போட்டியும் ஏலத்தில் அதிகமாகவே இருக்கும். வெளிநாட்டு வீரர்கள் வரிசையில் பந்துவீச்சாளர்களுக்கான கிராக்கி சற்று அதிகமாகவே இருக்கும். அத்தோடு கெய்ல், மக்கலம், டுபிளஸிஸ்,மோர்கன்,வில்லியம்சன்,ரூட்,வட்சன்,வோக்ஸ்,போல்ட்,ரபடா,பொலார்ட், சஹிப் ஆகியோருக்கான பெறுமதியும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இது தவிர இளம் இந்திய வீரர்கள் வரிசையில் ப்ரித்வி சோ,சுப்மன் கில் இருவருமே கவனிக்கப்பட வேண்டிய வீரர்கள்.

இன்னும் இரண்டு நாட்களே😳😳😳
இது ஊகங்கள்,எதிர்பார்ப்புகள் அனைத்திற்கும் ரிச்சர்ட் மட்லியின் கையில் இருக்கும் மணி விடை தரும்👍👍👍

#பிரசன்னா_தேவதாஸ்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.