Bangladesh

வெளிநாட்டு ஆடுகளங்களில் ஆசிய அணிகளின் டெஸ்ட் நிலவரம்…!

வெளிநாட்டு ஆடுகளங்களில் ஆசிய அணிகளின் டெஸ்ட் நிலவரம்…!

இந்திய மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி கேப்டவுன் மைதானத்தில் நிறைவுக்கு வந்துள்ளது.

இந்த போட்டியில் 208 எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும் இந்திய 135 ஓட்டங்களில் ஆட்டம் இழந்து 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.

2011 ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு பின்னர் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான வெளிநாட்டு ஆடுகளங்களில் 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரேயொரு வெற்றியையும், 16 தோல்விகளையும் , 6 வெற்றி தோல்வியற்ற பெறுதிகளையும் சந்தித்துள்ளது.

இதே காலப்பகுதியில் இலங்கை அணி 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 வெற்றியையும், 15 தோல்விகளையும் , 4 வெற்றி தோல்வியற்ற பெறுதிகளையும் சந்தித்துள்ளது.

பாகிஸ்தான் அணி 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 வெற்றியையும், 10 தோல்விகளையும் , 1 வெற்றி தோல்வியற்ற பெறுதிகளையும் சந்தித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.