India

தென் ஆப்பிரிக்காவின் வேகத்தில் சுருண்டது இந்தியா…!

தென் ஆப்பிரிக்காவின் வேகத்தில் சுருண்டது இந்தியா…!

இந்திய மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி கேப்டவுன் மைதானத்தில் நிறைவுக்கு வந்துள்ளது.

இந்த போட்டியில் குறைந்தளவான ஓட்ட எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டாலும் தென் ஆபிரிக்க அணியின் புயல் வேகத்துக்கு தாக்கு பிடிக்க முடியாத இந்திய அணி 72 ஓட்டங்கள் விதியசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.

போட்டியில் நேற்றைய 3 ம் நாள் முற்றுமுழுதாக கழுவப்பட்டு நிலையில் இன்றைய நான்காம் நாளில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை தென் ஆப்பிரிக்காவை ஆட்டம் காண செய்தனர்.

தமது 2 வது இன்னிங்சில் 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை மட்டும் இழந்திருந்த தென் ஆபிரிக்க அணி ,இன்று மேலதிகமாக 65 ஓட்டங்களிப் பெற்று 130 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

இதன் மூலம் இந்திய அணிக்கு வரலாற்று வெற்றியை பெறுவதற்கு 208 எனும் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

உலகின் அச்சுறுத்தல் மிகுந்த வேகப்பந்து வீச்சு படையணியைக் கொண்டுள்ள தென் ஆபிரிக்க அணி,இந்தியாவுக்கு கடுமையான நெருக்கடியைக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பை தென் ஆபிரிக்க அணி வலுவாக நிரூபித்துள்ளது.

ஸ்டெய்ன் உபாதையடைந்திருந்தாலும் பிலாண்டர், ரபாடா, மோர்கல் ஆகியோர் இந்தியாவை வெற்றி இலக்கை எட்ட முடியாது தடை போட்டனர்.

208 ஓட்டங்களை இலக்காக கொண்டு ஆடிய இந்திய அணி 71 வது ஓட்டத்தை பெற்ற நிலையிலேயே தமது 4 வது விக்கெட்டை இழந்தாலும் அதன் பின்னர் வேகமாக விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.

இறுதியில் 135 ஓட்டங்களுக்கு இந்திய அணி ஆட்டமிழக்க, போட்டியில் 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆபிரிக்க அணி அபார வெற்றியை தனதாக்கியது.

தென் ஆபிரிக்க அணி முதல் இன்னிங்சில் 286 ஓட்டங்களையும், இந்திய அணி முதல் இன்னிங்சில் 209 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை கவனிக்கத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.