கிரிக்கெட் செய்திகள்

விளையாட்டு.கொம் கனவு டெஸ்ட் அணி- 2017

2017 ஆம் ஆண்டில் கிரிக்கெட் உலகில் ஏராளமான, விறுவிறுப்பான பல டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன. இந்த ஆண்டின் இறுதி டெஸ்ட் போட்டிகள் Boxing Day ஆன இன்று ஆரம்பமாகியுள்ளன. இந்த வகையில் இந்த ஆண்டில் சிறப்பாக பிரகாசித்த வீரர்கள் அடங்கிய கனவு அணியை விளையாட்டு. கொம் தெரிவு செய்துள்ளது.

இந்த வருடத்தில் தென்னாப்பிரிக்காவிற்கு பெரும்பாலான போட்டிகளில் மிகச்சிறப்பான ஆரம்பத்தை கொடுத்து, 50 ற்கு மேற்பட்ட சராசரியோடு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்த டீன் எல்கரை ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக தெரிவு செய்துள்ளோம். மற்றைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக ஆசியாவிலும், அவுஸ்திரேலியாவிலும் சிறப்பாக ஓட்டங்களைக் குவித்த டேவிட் வோர்னரைத் தெரிவு செய்துள்ளோம்.

மத்திய வரிசையில், மூன்றாவது இடத்தில் தொடர்ச்சியாக பிரகாசித்து 67 என்ற சராசரியில் 1140 ஓட்டங்களைக் குவித்த சத்தீஸ்வர் புஜாரா இடம் பெறுகிறார். நான்காவது இடத்தில், இவ்வருடத்தில் அதிக ஓட்டங்களை குவித்த ஸ்ரிவ் ஸ்மித் இடம்பெறும்

அதேவேளை அவரே அணித்தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐந்தாவது இடத்தில் இவ்வருடத்தில் 75 ஐத் தாண்டிய சராசரியோடு 1059 ஓட்டங்களைக் குவித்த விராட் கோலி இடம்பெறுகிறார். ஆறாவது இடத்தில் இவ்வருடத்தில் மிக நீண்ட நேரம் களத்திலிருந்து ஆயிரம் ஓட்டங்களைத் தாண்டிய டினேஸ் சந்திமால் இடம்பெற, விக்கெட் காப்பாளராக முஸ்பிகுர் ரஹீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சுழல் பந்துவீசும் சகலதுறை வீரராக ரவிந்திர ஜடஜா ஆசிய ஆடுகளங்களில் எட்டாவது வீரராக இடம் பிடிக்க, ஒன்பதாவது இடத்தில் ஆரம்ப வேகப்பந்துவீச்சாளர் கங்கீஸோ ரபடா இடம்பிடிக்கின்றார். பத்தாவது இடத்தில் துல்லியமான பவுன்சர்கள் மூலம் எதிரணிகளை திணறடித்த நீல் வோக்னர் இடம் பெறுகிறார்.

ஆசிய மற்றும் அவுஸ்திரேலிய ஆடுகளங்கள் எல்லாவற்றிலும் தொடர்ச்சியாக அசத்தி இவ்வருடத்தில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய ஓவ்-ஸ்பின்னர் நாதன் லயன் பதினொராவது வீரராக இடம் பெறுகின்றார்.

பன்னிரெண்டாவது வீரராக ஆரம்ப பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் இடம்பெறுகின்றார். வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் ஜடேஜாவிற்கு பதிலாக அணியில் இடம்பெறக் கூடிய வீரராக இவர் அமைகின்றார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.