கட்டுரைகள்

விளையாட்டு.கொம்மின் கனவு ஒருநாள் அணி-2017

2017 ஆம் ஆண்டில் கிரிக்கெட் உலகில் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் உட்பட ஏராளமான, விறுவிறுப்பான ஒருநாள் போட்டிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன. இந்த ஆண்டின் இறுதி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய அணிகள் நாளை மோதவுள்ளன. இந்த வகையில் இந்த ஆண்டில் சிறப்பாக பிரகாசித்த வீரர்கள் அடங்கிய கனவு அணியை விளையாட்டு. கொம் தெரிவு செய்துள்ளது.

இந்த வருடத்தில் ஒரு இரட்டைச்சதம் உள்ளடங்கலாக, 70 ற்கு மேற்பட்ட சராசரியோடு 1293 ஓட்டங்களைக் குவித்த ரோகித் சர்மாவை ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக தெரிவு செய்துள்ளோம். மற்றைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகவும் இலக்குக் காப்பாளராகவும் குயின்ரன் டீ கோக்கை தெரிவு செய்துள்ளோம்.

மத்திய வரிசையில் மூன்றாவது இடத்தில், இவ்வருடத்தில் ஓட்டங்களை குவித்துத் தள்ளிய பாபர் ஆஸம் இடம்பெறும் அதேவேளை அணித்தலைவராகவும் நான்காம் இடத்திலும் இவ்வருடத்தில் 1460 ஓட்டங்களைக் குவித்த விராட் கோலியும், ஐந்தாவது இடத்தில் ஜோ ரூட் மற்றும் ஆறாவது இடத்தில் பென்ஸ் ஸ்ரோக்ஸ் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

ஆரம்ப வேகப் பந்துவீசும் சகலதுறை வீரராக கிறிஸ் வோக்ஸும், சுழல் பந்துவீசும் சகலதுறைவீரராக ரஷீத் கானும் அடுத்த இடண்டு இடங்களையும் நிரப்புகின்றனர். லெக்-ஸ்பின்னராகவும் உபயோகமான துடுப்பாட்ட வீரராகவும் சதாப் கான் ஒன்பதாவது வீரராக அமைகின்றார்.

முக்கியமான மத்திய ஓவர்களையும் இறுதி ஓவர்களை வீசும் வேகப்பந்து வீச்சாளராக சம்பியன்ஸ் கிண்ண நாயகன் ஹசன் அலி பத்தாவது வீரராக வருகின்றார். இடது ஆரம்ப வேகப்பந்து வீச்சாளராக ரென்ற் போல்ட் பதினொராவது இடத்தில் அமைகிறார். பன்னிரெண்டாவது வீரராக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் தமீம் இக்பால் இடம்பெறுகின்றார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.