New Zealand

போல்ட் அபாரம், தொடர் நியூசிலாந்து வசம்,தொடரும் விண்டீஸின் சோகம்!

போல்ட் அபாரம், தொடர் நியூசிலாந்து வசம்,தொடரும் விண்டீஸின் சோகம்!

விண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்பொழுது இடம்பெற்றுவருகிறது. முதல் போட்டியில் தோல்வியை தழுவிய விண்டீஸிற்கு இது ஒரு முக்கியமான போட்டியாக இருந்தபோதும் மீண்டும் படுதோல்வியை தழுவி தொடரை இழந்துள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பவீரர் ஜோஜ் வோகர் அரைச்சதம் கடந்து 58 ஓட்டங்களையும் கொலின் முன்றோ முப்பது ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர். அதன் பின் ஆடுகளம் நுழைந்த நெய்ல் வுறூம் ஆறு ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தார். எனினும் ரெய்லர் அரைச்சதம் கடந்து 57 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின் வந்த லதமும் பெரிதாக சோபிக்கவில்லை. பின்னர் ஆடுகளம் புகுந்த ஹென்றி நிக்கல்ஸ் மற்றும் அஸ்டில் அணியை தூக்கி நிறுத்தினர். இருவரும் இணைப்பாட்டமாக 130 (108) ஓட்டங்களைப் பெற்றனர். அஸ்டில் 49 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து அரைச்சதத்தை ஓர் ஓட்டத்தால் நழுவவிட்டார். நிக்கல்ஸ் இறுவரை ஆடி ஆட்டமிழக்காது 83 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க நியூசிலாந்து அணி ஐம்பது ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கெட்டுக்களை இழந்து 325 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் அதிகபட்சமாக சீல்டன் கொன்றேல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு 326 என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய விண்டீஸ்க்கு ஆரம்பம் முதல் அதிர்ச்சிவைத்தியம் கொடுத்தார் போல்ட். இவரது பந்து வீச்சில் லூவிஸ் (10), கைல் ஹோப் (4),சை ஹோப் (23),ஹெட்மையர்(2) ஆகியோர் வரிசையாக வெளியேறினர். பின்வந்த வீரர்களும் பெரிதாக சோபிக்கவில்லை. நேஸ் மாத்திர் இரட்டை இலக்க ஓட்டங்களை எட்டினார். இவர் 27 ஓட்டங்களைப் பெற்ற வேளை போல்ட்டின் பந்தில் ஆட்டமிழந்தார். போல்ட் கைப்பற்றிய இந்த விக்கெட்டானது இவர் ஒருநாள் போட்டியில் வீழ்த்தும் சதமாவது விக்கெட் ஆகும். இறுதியில் விண்டீஸ் 121 ஓட்டங்களுக்குள் சுருண்டு போனது. பந்துவீச்சில் தனது சிறந்த பந்துவீச்சு பெறுதியை இன்றைய போட்டியில் பெற்ற போல்ட், பத்து ஓவர்கள் பந்துவீசி மூன்று ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக முப்பத்துநான்கு ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஏழு விக்கெட்டுக்களை அள்ளினார். போட்டியின் நாயகனாகவும் போலட் தெரிவானார். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரை 2-0 என்ற அடிப்படையில் கைப்பற்றி தொடரில் முன்னிலையில் உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.