Foot Ball

எல் கிளாசிகோ – ரொனால்டோவால் சிக்கலை சந்திக்கும் ரியல் மாட்ரிட்.

எல் கிளாசிகோ – ரொனால்டோவால் சிக்கலை சந்திக்கும் ரியல் மாட்ரிட்.

இந்த வாரத்துக்கான மிகப்பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது எல் கிளாசிகோ. பார்சிலோனா ரியல் மாட்ரிட் ஆகிய இரு அணிகளும் போட்டிக்கான தயார்படுத்தல்களில் ஈடுபட்டுவரும் வேளையில் ரியல் மாட்ரிட் தரப்பில் இருந்து ஒரு அதிர்ச்சி செய்து வெளி வந்துள்ளது.

கடந்த வாரம் கிளப் வேர்ல்ட் கப் வெற்றியுடன் ரொனால்டோ காயத்தால் அவதிப்படுவதாக தெரிகிறது. கடந்த புதன் கிழமை ரேக்ளா மாட்ரிட் பயிற்சியில் ரொனால்டோ கலந்துகொள்ளாத வேளை வியாழக்கிழமை யும் ரொனால்டோ ரேக்ளா மாட்ரிட் அணி வீரர்களுடன் பயிற்சி மேற்கொள்ளாமல் தனியாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ரியல் மாட்ரிட் அணி அபூ தாபி இல் இருந்து திரும்பியதில் இருந்து ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியுடன் பயிற்சிகளை மேற்கொள்ளாதது ரியல் மாட்ரிட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
எனினும் சனிக்கிழமை நடைபெறும் எல் கிளாசிகோ போட்டியில் ரொனால்டோ விளையாடுவார் என ரியல் மாட்ரிட் தரப்பு தெரிவித்துள்ளது.

லா லிகா தொடரில் தற்போது 11 புள்ளிகளால் பரிசேலோனாவிடம் பின் தங்கியுள்ள ரியல் மாட்ரிட் இப்போட்டியில் கட்டாய வெற்றியை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதே சமயம் பார்சிலோனா இத்தொடரில் வீழத்த முடியாத அணியாக திகழ்கிறது. இந்நிலையில் ரொனால்டோ விளையாட மாட்டார் போன்ற சர்ச்சைகள் ரியல் மாட்ரிட் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.