Foot Ball

பார்சிலோனா ரியல் மாட்ரிட் அணிகளின் எல் கிளாசிகோ மோதல்

பார்சிலோனா ரியல் மாட்ரிட் அணிகளின் எல் கிளாசிகோ மோதல்

ஸ்பெயின் இன் உலக புகழ் பெற்ற கால்பந்து கலகங்களான பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையில் இடம்பெறும் எல் கிளாசிகோ மோதல் இந்த வாரம் சனிக்கிழமை இடம்பெற உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க போட்டியாக கால்பந்து உலகில் பேசப்படும் இப்போட்டி தற்போது மெஸ்ஸி எதிர் ரொனால்டோ என்றபடியான போட்டியாக மிகவும் எதிர்பார்ப்பு மிக்க போட்டியாக அமைந்துள்ளது.

தற்போது மெஸ்ஸி ரொனால்டோ எனும் கால்பந்தின் இரு பெரும் துருவங்களின் நேரடி மோதல் மற்றும் உலகளாவிய ரீதியில் மிகப்பெரும் ரசிகர் படையை கொண்டுள்ள இரு அணிகளுக்கிடையிலான போட்டி என்பதால் சமூக வலைத்தளங்கள் சில சமயம் நேரடி காலத்திலும் கூட ரசிகர்களின் மோதல் என பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் எப்போதும் தலைப்புச்செய்தியாக வலம் வரும் எல் கிளாசிகோ நீண்ட வரலாற்று பின்புலத்தை தன்னகத்தே கொண்டது.

இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு மிக்க போட்டியாக இது அமைவதற்கு முக்கிய காரணம் ஸ்பெயின் இன் முக்கிய இரு பெரும் நகரங்களான மாட்ரிட் மற்றும் பார்சிலோனா ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகளாக ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகள் விளங்குவதாலும் அத்துடன் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா முறையே ஸ்பெயின் மற்றும் காடலான் தேசியத்தை பின்பற்றுவதாக அறியப்படுவதும் முக்கிய காரணமாக அமைகிறது.

1930 களில் மேற்குறிப்பிட்ட அரசியல் காரணங்களால் வலுப்பெற்ற எல் கிளாசிகோ மோதல் 1943 கோபா டெல் அரையிறுதி போட்டியில் முதல் சுற்று போட்டியில் பார்சிலோனா 3-0 என வெற்றி பெற்று இரண்டாம் சுற்று போட்டியில் ரியல் மாட்ரிட் 11-1 என பரிசேலோனாவை வீழ்த்தி கால்பந்தின் மிகப்பெரும் மோதலாக மாறியது. அப்போட்டியில் நடுவர்களின் தீர்ப்புக்கு எதிர்ர்த்து குரல் கொடுத்த ரியல் மாட்ரிட் மற்றும் ரசிகர்களுக்கிடையிலான மோதல் என கால்பந்தின் உச்சகட்ட மோதலாக மாறியது.

அத்துடன் 1953 இல் டி ஸ்டெபனோ இன் ரியல் மாட்ரிட் அணிக்கான சர்ச்சைக்குரிய மாற்றம் இரு அணிகளையும் கால்பந்தின் எல்லா அங்கங்களிலும் மோதலுக்கு உற்படுத்தியது. அத்துடன் மீண்டும் 1968 இல் கோப டெல் போட்டியில் பார்சிலோனா இன் வெற்றிக்கெதிராக மைதானத்தில் போத்தல்கள் எரிந்து ரகளை செய்த ரியல் மாட்ரிட் வீரர்கள் என மோதல் சம்பவங்கள் தொடர்ந்தன. 2000 ஆம் ஆண்டில் போர்த்துக்கல் அணியின் லூயிஸ் பிகோ பார்சிலோனாவில் இருந்து ரியல் மாட்ரிட் இற்கு மாற்றம் பெற்றது மிகப்பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இவ்வாறு பல மோதல்களுடன் கடந்து வந்த எல் கிளாசிகோ தற்போது மெஸ்ஸி ரொனால்டோ மோதலில் காலம் கண்டு வருகிறது. இரு திறமையான முன்னணி வீரர்கள் தமது அணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்பதும் அத்தோடு லா லிகா சாம்பியன் பட்டத்துக்கு நேரடியாக மோதும் இரு அணிகள் சாம்பியன் பட்டத்துக்கான தமது இருப்பை நிலை நிருத்த்த வேண்டும் என்பதும் எல் கிளாசிகோ போட்டியின் எதிர்பார்ப்புக்களாக பெரிதும் அமைந்துள்ளது.

இவ்வாறு பல எதிர்பார்ப்புக்கள் உள்ள எல் கிளாசிகோ போட்டிகளில் இதுவரை 235 போட்டிகளில் பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகள் மோதியுள்ளன. அவற்றில் ரியல் மாட்ரிட் 95 வெற்றிகளுடன் பார்சிலோனாவை (91) விட முன்னணியில் உள்ளது.

அணிகளின் புள்ளிவிபரங்களை விட அதிகம் எதிர்பார்க்கப்படும் மெஸ்ஸி ரொனால்டோ மோதலின் புள்ளி விபரம் வருமாறு.

 

மேலதிகமாக இவ்வருட ஆரம்பத்தில் இடம்பெற்ற எல் கிளாசிகோ போட்டியில் இறுதி நிமிடத்தில் கோல் அடித்து பெர்னாபியு ஸ்டேடியத்தில் அசத்தல் சாகசம் புரிந்த மெஸ்ஸி பின் அதற்கு சூப்பர் கோப போட்டியில் கேம்ப் நோயு மைதானத்தில் வைத்து பழிவாங்கிய ரொனால்டோ என சமீபத்தைய சம்பவங்கள் மேலும் இப்போட்டிக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

 

 

 

 

 

 

இப்போட்டி வரும் சனிக்கிழமை (23 ஆம் திகதி) இலங்கை நேரப்படி மாலை 5.30 க்கு ரியல் மாட்ரிட் அணியின் சொந்த மைதானமான பெர்னாபியு மைதானத்தில் இடம்பெறும்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.