Australia

கிரிக்கெட் இன் வைரக்கல் ரிக்கி பொன்டிங் !!!

கிரிக்கெட் இன் வைரக்கல் ரிக்கி பொன்டிங் !!!

கிரிக்கெட்டையும் இந்தியாவைவும் எப்படி பிரிக்க முடியாதோ, அதே மாதிரி ஆஸ்திரேலியா இல்லாமல் கிரிக்கெட்டை நினைச்சு கூட பார்க்க முடியல. ஆஸ்திரேலியா அப்படின்னா டக்குன்னு மின்னக்கூடிய ஒரு வைரக் கல்

The Cricketer of Decade, Most successful, captain,Classy batsman and a little dynamite
One only punter, chuck e cheese ரிக்கி .

வரலாற்றில் மின்னக்கூடிய வீராதிவீரர்களில் பான்டிங் எவரும் மறுதலுத்திட முடியாத இடத்தை தனக்கு தானே உருவாக்கிக் கொண்ட உன்னதாமான வீரன். டேவிட் பூன் என்னும் ஒரு பெரிய ப்ளேயரோட ரீப்ளேஸ்மென்டா அணிக்குள்ள நுழைஞ்சு அந்த ப்ளேஸ் பாண்டிங்கோடதுன்னு மாத்துனதுல ஆரம்பிச்சது ரிக்கியின் இன்னிங்ஸ்.1996 இலங்கைக்கெதிரான டெபுடன்ட் ரிக்கி ஒரு அருமையான இன்னிங்ஸ் ஆடியிருப்பார் சதத்தை நாலு ரன்னில தவற விட்ருந்தாலும் ஆஸியின் இன்னொரு லெஜன்ட் ஒருத்தன் உருவாறத பதியிறமாதிரியான ஒரு இன்னிங்ஸ்.அதுக்கப்பறம் மார்க் வாக்கிடம் இருந்து மெல்ல மெல்ல கேப்டன்ஸியை கற்றுக் கொண்டே தன்னை ஒரு சிறந்த வீரனாக முன்னிறுத்திக் கொண்டே வந்தார். ஸ்டீவ் வாக்கின் அணியில் பாண்டிங் ஒரு ஆணிவேராக விளங்க ஆரம்பித்தார். ஸ்டீவ் வாக்கின் ஓய்விற்கு பிறகு எந்தவொரு போட்டியிமின்றி கேப்டன்ஸிப் பாண்டிங்கின் தலையில் ஏறியது.2002 இல் ஓடிஐ கேப்டனாகவும் 2004 இல் ஒட்டுமொத்த கேப்டனாகவும் மாறி பரபரப்பானர் பாண்டிங். 2004-11 இந்த காலகட்டத்தில் ஆஸிக் கொடி உலகெமெல்லாம் பரந்ததுக்கு காரணம் பாண்டிங். மெக்ராத், வார்னே,ஹைடன்,கில்கிறிஸ்,கில்லெஸ்பி, மார்டின்,ஸைமன்ட்ஸ்ன்னு அந்த டீம் ஒரு அசுரபடை. வக்காலி மஞ்ச சொக்கா இறங்கிட்டாய்ங்க இனி மண்ணுதான் அப்படின்னு ரசிகர்ள் புலம்புறமாதிரி ஆடுவாங்க. அந்த காலம் ஆஸிக் கிரிக்கெட்டின் பொற்காலம் அப்படின்னு சொன்னா அது மிகையாகாது.

அப்பவும் இந்த டீமை சோதிக்க ரெண்டு டீம் இருந்துச்சு ஒன்னு இந்தியா இன்னொன்னு தெ.ஆப்ரிக்கா . ஒரு பேட்டில்ல பாண்டிங் சொல்வாப்ள, ” one of toughest opponent batsman in the world is lakshman. But surprisingly india has more than one lakshmans ” அப்ப பாருங்க நம்மாள😂. ஒகே நம்ம ரிக்கி கிட்ட வருவோம் ODI கேப்டன்ஸிப் கிடைச்ச மறுவருசம் இந்தியா ஆஸிக்கு போகுது. என் வாழ்நாள்ள மறக்க முடியாத சீரிஸா அது இருந்துச்சு சிங்கத்தை அதோட கோட்டையில சந்திக்க இந்தியாவும் புலியை எதிர்நோக்கி ஆஸியும் கோதாவுல குதிச்சாங்க. முதல் டெஸ்ட் ஆ- 323 , இ-406
லாங்கெர் ஒரு செஞ்சுரி தாதா ஒரு செஞ்சுரி
ஜாஹிர் ஒரு 5 கில்லெஸ்பி 4 ன்னி சவ சவன்னு போய் ட்ராவாச்சு. இரண்டாவது டெஸ்ட் வக்காலி அடிச்சான் பாரு 242 ப்யூர் கிளாஸ் என்ன சாட்ஸ், கவர் ட்ரைவ் புல்ஸாட்ன்னு அடிலைடே ஒரே அதகளமா இருந்துச்சு , 556 டோட்டாலா நம்மாளுகளும் சளைக்காமல் தல டிராவிட் ஒரு 233 , லக்ஸமன் ஒரு 148 அடிச்சு 523 வந்துச்சு. சரி இந்த மேட்ச் ட்ராவாயிடும் அப்படின்னு நினைச்சா அகர்காரும் சச்சினும் 196க்கு சுருட்ட இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில ஜெயிச்சுச்சு.

மூனாவது மேட்ச் இந்தியா 366 க்கு ஆல் அவுட் சேவாக் 195 அடிச்சாப்ள. அப்பறம் ஆஸி இறங்க மறுக்கா அடிச்சான்யா எங்காளு இன்னொரு இருநூறு இந்த தடவை 257 நொறுக்கி 558 . இந்த மேட்ச் ஆஸி 9 விக்கெட் வித்தியாசத்தில ஜெயிச்சுச்சு. அடுத்த டிசைடர் மேட்ச் சச்சினும் லெக்ஸமனும் பொளக்க அடிக்க 705 மாமூத் ஸ்கோர் இந்த மேட்சும் டிராவாகி சீரிஸ் டிரா. மேன் ஆப் த சீரிஸ் வேற யாரு ரிக்கிதான் மொத்தமா 706 ரன், நம்ம தல ட்ராவிட்டும் அறுநூறு சொச்சம். நான் பாண்டிங்க் ரசிகனானது இந்த சீரிஸ்லதான்.

அடுத்து ஆஸஸ் ஓல்ட்ராப்போர்ட் மேட்ச் 2005 ல ஏற்கனவே ஒரு மேட்ச் வின் , ஒன்னு ட்ரான்னு இங்கிலாந்து லீடிங்ல இருந்த மேட்ச் ஒரு செம செஞ்சுரி அடிச்சு 150+ சீரிஸ் ட்ரா பன்னுவாப்ள. அப்பறம் வேர்ல் ரெக்கார்ட் பிரேக்கிங் மேட்ச் தெ.ஆ எதிரா 2006 ல 105 பாலுக்கு 164 , 434ரன் யாரும் நெருங்க முடியாத ஸ்கோர் . பேட் பாயஸ் கிப்ஸும் ஸ்மித்தும் தட்டி பறிச்சிருப்பானுக , இந்த மேட்ச் சீடி இன்னும் வச்சுருக்கேன் நான் .

அப்பறம் இன்னொரு கிளாஸ் இன்னிங்ஸ்ன்னு பார்த்தால் நம்மளுக்கு வயித்தெரிச்சல உண்டாக்குன 2003 வேர்ல்ட் கப் பைனல் மேட்ச்தான். பான்டிங் பேட்ல ஸ்பிரிங்க் வச்சுறுத்தான்ங்கிற வதந்தி அந்த கிளாஸ் இன்னிங்ஸ கறுப்பு இன்னிங்ஸா கொஞ்ச நாளைக்கு மாத்துச்சு. அப்பறம் பல இன்னிங்ஸ்கள், ரெக்காட்ஸ், ட்ராபிஸ்ன்னு வேற லெவல்ல இருந்துட்டு ரிடைரும் ஆகிட்டாப்ள . பாண்டிங்கோட ஸ்லெட்ஜிங்க் தவிர்த்து அவர்ட்ட எல்லாமே பிடிக்கும் பீல்டிங், கேப்டன்ஸிப், மிட் ஆப் சிக்ஸர்ஸ், கவர் ட்ரைவ், புல்ஸாட் அக்ரெசன் வேற லெவல் .

இன்னிக்கு 42 ஆம் பிறந்தநாள் கொண்டாடுறாப்ள! வாழ்த்துகள் பாண்டிங்😍

-மகேஸ்வரன்-

1 Comment

1 Comment

  1. prabu

    December 20, 2017, 3:26 pm at 3:26 pm

    தயவுகூர்ந்து வார்த்தைகளை அல்லது சொற்களை சற்று கூர்மையாக்குங்கள் செதுக்குங்கள் ஐயா… என்ன மொழி இது… ஒன்றும் புரியேல்ல தமிழ் பற்று என்று பெரிதாக எண்ணிவிடாதீர்கள். தமிழில் வாசிக்கமட்டுமே அறிந்த பேதை நான் அவ்வளவே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.