#ICC Champions Trophy

நியூசிலாந்தில் அடுத்த உலக கிண்ணம் !

நியூசிலாந்தில் அடுத்த உலக கிண்ணம் !

அடுத்தாண்டு நியூசிலாந்தில் இடம்பெறவுள்ள இளையோர் உலக கிண்ண போட்டிகளுக்கான உலக கிண்ணம் நியூசிலாந்தின் வெலிங்கடனில் இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

போட்டி தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் 44 நாட்களே உள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவ் ரிச்சர்ட்ஸன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிக முக்கிய வகிபாகத்தை கொண்டிருக்கும் இளையோர் உலக கிண்ண போட்டிகள் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 13 ம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 3 ம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவ் ரிச்சர்ட்ஸன்,நியூசிலாந்தின் விளையாட்டுத்துறை அமைச்சர், நியூசிலாந்து கிரிக்கெட் சபை தலைவர், நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரரும் போட்டித்தொடருக்கான தூதுவருமான கோரி ஆண்டர்சன் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

இளையோர் உலக கிண்ண தொடரில் இதுவரை இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் தலா 3 தடவைகள் கிண்ணத்தை வெற்றிகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.