Home

#SLvIND-இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஏமாற்று வேலையில் ஈடுபட்டனரா-ஸ்ரீலங்கா கிரிக்கெட் விளக்கம்.

#SLvIND-இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஏமாற்று வேலையில் ஈடுபட்டனரா-ஸ்ரீலங்கா கிரிக்கெட் விளக்கம்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான கொல்கொத்தா டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர்கள் கிரிக்கெட் உணர்வை மறந்து ஏமாற்று வேலையில் ஈடுபட்டதாக செய்திகள் பரப்பப்படும் நிலையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தரப்பு அதனை தெளிவு படுத்தியுள்ளது.

இலங்கை வீரர்களான டில்ருவான் பெரேரா மற்றும் ஹேரத் ஆகியோர் போட்டியில் துடுப்பாடிக் கொண்டிருக்கும் போதே குறித்த சம்பவம் நேர்ந்தது.

மொஹமட் சாமியின் பந்துவீச்சில் டில்ருவான் பெரேரா ஆட்டமிழந்ததாக நடுவரால் அறிவிக்கப்பட்டது, அவர் ஆடுகளம் விட்டு அகன்றுகொண்டிருக்கும் நிலையில், திடீரென திரும்பிவந்து மூன்றாவது நடுவரிடம் (DRS_Review ) கோரினார்.

இதன்முலமாக,இலங்கை வீரர்களது ஓய்வறையிலிருந்தது வந்த அறிவித்தல் பிரகாரமே திடீரென ரிவியூ(Review) கோரியதாக ஊடகங்கள் மூலம் செய்திகள் புறப்பட்டன.

உண்மையில் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்பதை ஆடுகளத்தின் மறுபுறத்தில் நின்ற ஹேரத்தும் ,ஸ்ரீலங்கா கிரிக்கெட் தரப்பும் விளக்கம் கொடுத்து தெளிவுபடுத்தியுள்ளது.

இலங்கை அணிக்கு நடுவரின் முடிவை பரிசீலனைக்கு உட்படுத்தும் (DRS) மேலதிகமாக இருக்கிறதா என்பது மட்டுமே களநடுவரிடம் கேட்கப்பட்டது, அதனை தெரிந்து கொண்டதற்கு பின்னர்தான் டில்ருவானை ரிவியூ கேட்பதற்கு கோரப்பட்டதாகும் ஹேரத் விளக்கம் கொடுத்துள்ளார்.

பட விளக்கம்-

1. பந்துவீச்சாளர் ஆட்டமிழப்பு கோருதல்

2.நடுவர் ஆட்டமிழப்பு வழங்குதல்.

3.DRS கோராமல் களத்தில் இருத்தல்

4 .ஆடுகளம் விட்டகல்தல்

5 .திரும்பிவந்து ரிவியூ கோருதல்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.