Australia

“வாரம் ஒரு பிரபலம்-கில்லி என்கின்ற கில்கிறிஸ்ட்”

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஒரு முக்கிய புள்ளி, “கில்லி” மற்றும் “சர்ஜி” எனும் புனை பெயர்களாலும் அழைக்கப்படும் ஒருவர் தான் இந்த கில்கிறிஸ்ட். உலக கிரிக்கெட்டே வியந்து பார்த்த தலைசிறந்த “விக்கெட் காப்பாளர்” இவர். ஆஸ்திரேலிய அணிக்கு உலக கிண்ண காலங்களில் அதன் பல வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்தவரும் கூட, இவ்வாறான பல சிறப்புக்களை தன்னகத்தே வைத்துள்ள அடம் கில் கிறிஸ்ட் 14/11/1971 அன்று பிறந்தார்.

இவரது ஒருநாள் போட்டியின் அறிமுகமானது 25/08/1996 அன்று தென்னாபிரிக்காவுக்கு எதிராகக் காணப்பட்டது. இந்தப்பேட்டியில் வெறுமனே பதினெட்டு ஓட்டங்களை மாத்திரம் பெற்று அலன் டொனால்டின் பந்துவீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். 1999 ஆம் ஆண்டு உலக கிண்ண அணியில் இடம்பிடித்த இவர் முதல் மூன்று போட்டிகளிலும் முறையே 6, 14, 0 ஓட்டங்களுடன் நடையைக்கட்டினார். எனினும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 39 பந்துகளில் 63 ஓட்டங்களைப் பெற்று ஆஸியை சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு அழைத்து சென்றார்.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான அரையிறுதியில் இருபது ஓட்டங்களைப் பெற்றாலும் அலன் டொனால்டினை ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்க செய்து போட்டியை சமனிலையில் முடிய உறுதுணையாக இருந்தார். எனினும் குழு நிலை ஆட்டத்தில் தென்னாபிரிக்காவை வென்ற ஆஸி இறுதிக்கு தகுதியாகியது. இறுதிப் போட்டியில் கில்லி 54 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க பாகிஸ்தானை எட்டு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கிண்ணத்தை ஆஸி வென்றது. இத் தொடரில் கில்லி 237 ஓட்டங்களை 21.54 எனும் சராசரியில் பெற்றார்.

2003 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை எடுத்து நோக்கினால், இந்த தொடரில் 408 ஓட்டங்களை 40.80 எனும் உயரிய சராசரியில் பெற்றிருக்கின்றார். இதில் நான்கு அரைச்சதங்களும் அடங்கும். இலங்கைக்கு எதிரான சூப்பர் எயிட் போட்டி ஒன்றில் 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த உலக கிண்ணம் முடிந்த கையோடு இடம் பெற்ற விண்டீஸ்க்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு சதம் உட்பட 282 ஓட்டங்களை சராசரி 70.50 இலும் 212 ஒருநாள் ஓட்டங்களை சராரசி 35.33 இலும் பெற்றிருக்கிறார்.

பாகிஸ்தானுக்கு எதிராக 05/11/1999 அன்று பிரிஸ்பேனில் இடம் பெற்ற போட்டியில் 381 ஆவது ஆஸியின் டெஸ்ட் வீரராக அறிமுகமானார். தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே 149 ஓட்டங்களைப் பெற்று ஆஸியின் வெற்றிக்கு வழிகோலினார். தனது தொடர்ச்சியான துடுப்பாட்ட வலிகை கைகொடுக்க பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிராக தலா மூன்று போட்டிகளில் ஆடி, மொத்தமாக ஆறு டெஸ்ட் போட்டிகளில் 485 ஓட்டங்களை 69.28 எனும் சராசரியில் பெற்றார். 2001 இல் இடம்பெற்ற ஆஷஸ் தொடரில் ஆஸி 4-1 என்று வெற்றி பெற்றது. இத்தொடரில் 340 ஓட்டங்களை சராசரி 68.00 இல் பெற்றதோடு மட்டும் நில்லாமல் 26 ஆட்டமிழப்புக்களையும் செய்தார். தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஜொகானஸ்பேர்க்கில் வைத்து பெற்ற 204 ஓட்டமே கில்லியின அதிகபட்ச டெஸ்ட் ஓட்டமாகும்.

இவர் டெஸ்ட் போட்டிகளில் ஆஸி அணிக்காக ஆறு போட்டிகளில் அணித்தலைவராக செயற்பட்டிருக்கிறார். இதில் நான்கு போட்டிகள் வெற்றியிலும் தலா ஒன்று முறையே தோல்வி மற்றும் சமனிலையில் முடிவடைந்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் அதிவேக சதம் பெற்றவர்கள் வரிசையில் கில்லி நான்காம் இடத்தில் இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிராக 16/12/2006 அன்று இடம்பெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றில் வெறுமனே 57 பந்துகளில் சதம் கடந்து அசத்தியுள்ளார். கில்லியே முதன்முதலில் டெஸ்ட் போட்டிகளில் நூறு சிக்ஸ்சர்கள் அடித்தவராவார். எனும் அதிக சிக்சர் பட்டியலில் இப்போது இரண்டாம் நிலையிலேயே கில்லி உள்ளார். இவர் ஒரு விக்கெட் காப்பாளராக டெஸ்ட் போட்டிகளில் 416 ஆட்டமிழப்புகளை மேற் கொண்டுள்ளார். இவரது இறுதி டெஸ்ட் போட்டியானது இந்தியாவுக்கு எதிராக 24/01/2008 இல் அமைந்தது.

இதுவரை 96 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய கில்லி 5570 ஓட்டங்களை சராசரி 47.61 இல் பெற்றுள்ளார். அதிகபட்ச ஓட்டம் 204 ஆகும். இவ் ஓட்டத்தொகையில் 26 அரைச்சதங்களும் 17 சதங்களும் அடங்கும்.

2007 ஆம் ஆண்டு உலக கிண்ணம் கில்லியின் மிகவும் சிறப்பான் கிண்ணமாக காணப்படுகிறது. குழு நிலை ஆட்டங்களில் முறையே 46, 57, 42 ஓட்டங்களைப் பெற்றார். எனினும் சூப்பர் எயிட் போட்டியில் விண்டீஸ்க்கு எதிராக வெறுமனே ஏழு ஓட்டங்களைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 59 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்று வெற்றிக்கு வழிசமைத்தார். மீண்டும் ஒரு தடுமாற்றம் காணப்பட்டது நியூசிலாந்துக்கு எதிராக வெறுமனே எட்டு ஓட்டங்களில் நடையைக்கட்டினார். அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஒரு ஓட்டத்துடன் வெளியேறினாலும் ஒரு சிறந்த விக்கெட் காப்பாளராக நான்கு ஆட்டமிழப்பகளை செய்தார். மொத்த போட்டியிலும் சேர்த்து மொத்தமாக பதின்னான்கு ஆட்டமிழப்புக்கள். இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் சதம் கடந்து அசத்தினார். இறுதிப் போட்டியில் 149 (104) ஓட்டங்களைப் பெற்றார். இதுவே உலக கிண்ணத்தில் அதிகபட்ச ஓட்டமாகும்.

மொத்தமாக ஒருநாள் போட்டிகளில் 472 ஆட்டமிழப்புகளை செய்துள்ளார். இலங்கைக்கு எதிராக 14/02/2006 இல் வெறுமனே 67 பந்துகளில் சதம் கடந்துள்ளார்.

இதுவரை 287 ஒருநாள் போட்டிகளில் ஆடிய கில்லி 9619 ஓட்டங்களை 35.89 எனும் சராசரியில் பெற்றுள்ளார். அதிகபட்சம் 172 ஆகும். இதில் 55 அரைச்சதங்களும் 16 சதங்களும் அடங்கும். இவ்வாறுஆடிய கில்லி 04/05/2008 அன்று இந்தியாவுக்கு எதிராகஇறுதி ஒருநாள் போட்டிகளில் ஆடினார்.

கில்கிறிஸ்ட் பெரிதாக இருபது இருபது போட்டிகளில் நாட்டம் காட்டவில்லை போலும், 17/02/2005 இல் நியூசிலாந்துக்கு எதிராக இருபது இருபது போட்டியில் அறிமுகமாகிய கில்லி வெறுமனே 13 போட்டிகளில் ஆடி 272 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இவரது இறுதி இருபது இருபது போட்டி இந்தியாவுக்கு எதிராக 01/02/2008 இல் காணப்பட்டது. கில்லியின் ஐபிஎல் வாழ்வினை எடுத்து நோக்கின் 2008-2010 காலப்பகுதிகளில் டெக்கானுக்காகவும் 2011-2013 காலப்பகுதிகளில் பஞ்சாப் அணிக்காகவும் ஆடியுள்ளார். இதுவரை 80 ஐபிஎல் போட்டிகளில் ஆடிய கில்லி 2069 ஓட்டங்களை சராசரி 27.22 இல் பெற்றுள்ளார். அதிகபட்சம் 109 ஆகும். இதில் இரு சதங்களும் பதினொரு அரைச்சதங்களும் அடங்கும். ஐபிஎல் சார்பில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்.

கில் கிறிஸ்ட் இற்கு கிடைக்கப்பெற்ற மரியாதைகளை எடுத்து நோக்கினால், 2002 இல் “Wisden cricketers of the year” விருதும், ஆஸியால் 2003,2004 ஆம் ஆண்டுக்கான “International player of the year” விருதும் வழங்கப்பட்டது. 2003 இல் “Allan Border Medal” வழங்கியும், 2004 இல் “Richie Benaud ‘s Greatest XI” விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

உலகின் தலைசிறந்த விக்கெட் காப்பாள துடுப்பாட்ட வீரரான கில்கிறிஸ்ட் இன்றும் பல மரியாதைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.💖

சி.சாந்தகுமார்.💖

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.