India

போலி களத்தடுப்பு செய்த சந்திமால்- கோபமடைந்த கோஹ்லி…! (வீடியோ இணைப்பு)

போலி களத்தடுப்பு செய்த சந்திமால்- கோபமடைந்த கோஹ்லி…!
(வீடியோ இணைப்பு)

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகின்றது,

போட்டியின் முதலிரு நாட்களும் மழை மிகப்பெரிய தலையிடியைக் கொடுத்திருந்தாலும், இன்றைய நாளில் எதுவித தடையையும் காலநிலை ஏற்படுத்தவில்லை.

போட்டியில் தடுமாற்றத்தின் மத்தியில் துடுப்பாடிக் கொண்டிருந்த இந்தியர்களை வெறுப்பேற்றும் செய்கையில்,இன்றைய நாள் ஆட்டத்தின்போது இலங்கை அணித்தலைவர் லெஜெண்ட் சந்திமால் ஈடுபட்டார்.

போலிக் களத்தடுப்பு (Fake Fielding ) முறையில் இந்தியர்களை குழப்பத்திற்கு உள்ளாக்கும் நடவடிக்கையில் சந்திமால் ஈடுபட்டார்.சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளின் அடிப்படையில் இந்தமாதிரியான நடவடிக்கையில் ஒரு வீரர் ஈடுபட்டால் எதிரணிக்கு 5 ஓட்டங்கள் வழங்கப்படுவது வழமையாகும்.

இந்த நடவடிக்கைக்கு ஓய்வறையில் இருந்த இந்திய அணித்தலைவர் கோஹ்லி கோபமுற்று 5 ஓட்டங்கள் என்பது போன்று சைகை கட்டியமையும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ இணைப்பு.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.