India

வாழ்ந்து கொண்டிருக்கும் வருங்கால சாதனைப்பட்டியல்- விராட் கோலி

“உலக கிரிக்கெட்” என்ற பதத்தினை எடுத்துநோக்கினால் அதிலே இந்தியாவுக்கு என்று ஒரு இடம் கட்டாயம் காணப்படும். சச்சின், ராவிட், சேவாக் இப்பிடிப்பட்டோர் இருப்பதாலோ என்னமோ இந்தியா இன்னும் ஒரு வலுவான கிரிக்கெட் அணியாகவே பயணித்துவருகிறது. அந்தவகையில் “விராட் ஹோலி” என்ற இந்த நாயகன்தான் தற்கால கிரிக்கெட்டின் கதாநாயகன். எதிர்கால சாதனைப்பட்டியலும் கூட.

சச்சின், லாரா, மெக்ராத், ஸ்ரெய்ன், சங்கா, ஸ்மித், வில்லியர்ஸ் போன்ற கிரிக்கெட் பிரபலங்களால் புகழாரம் சூட்டப்பட்ட இன்றும் பல சாதனை நாயகர்களால் புகழாரம் செய்யப்பட்டுக்கொண்டும் இருக்கும் “Run Machine” என வர்ணிக்கப்படும் விராட் ஹோலிக்கு இன்று பிறந்தநாள்! “Espn’s list of word’s most famous Athletes” இன் 2016 ஆம்ஆண்டுக்கான பட்டியலில் எட்டாம் நிலையில் இருந்தவர்தான் விராட் ஹோலி. தற்போதைய ஆடுகளங்கள் கண்டுவியக்கும் ஆட்டநாயகனான ஹோலி 1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் திகதி பிறந்தார்.

2006 ஆம் ஆண்டு முதல் தர போட்டிக்காக அறிமுகமாகிய விராட், 2008 ஆம் ஆண்டு பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண அணியில் இந்திய அணிக்கு தலைவராகசெயற்பட்டதோடு கிண்ணத்தையும் வென்றார். இதற்கு சிலமாதங்களின் பின்னர், ஒருநாள் போட்டிகளில் 18/08/2008 அன்றும் இருபது இருபது போட்டிகளில் 12/06/2010 அன்றும் டெஸ்ட் போட்டிகளில் 20/05/2011 அன்றும் அறிமுகமானார்.


விராட் ஹோலி ஒரு வெற்றிகரமான இருபது இருபது போட்டிகளின் ஆட்டக்காரராகவும் இருக்கிறார். 2014 & 2016 களில் இடம்பெற்ற இருபது இருபது உலககோப்பையில் தொடர்நாயகன் விருதும் பெற்றார். ஒருநாள் அணிக்கு கப்டனாக 2012 இலும் டெஸ்ட் அணிக்கு கப்டனாக 2014 காலப்பகுதிகளில் செயற்பட ஆரம்பித்த இவர் ஒரு ஆளுமைமிக்க கப்டனாக உலகை வலம்வந்த வண்ணம் உள்ளார்.

இவரின் ஆளுமைக்கும திறமைக்கும் சிறந்த விருதுகளும் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. 2012 இல் “Icc ODI player of the year” விருதும் 2011-2012 & 2014-2015 காலப்பகுதிக்கான “BCCI’s international cricketer of the year” விருதும் , 2013 இல் “Arjuna Award” விருதும் கிடைக்கப்பட்டுள்ளது. 2017 இல் “Padma shri” விருதும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

இவருடைய சாதனைப்பட்டியல்களை எடுத்து நோக்கினால், இருபது இருபது போட்டிகளில் வேகமான ஆயிரம் ஓட்டங்கள், ஓரே வருடத்தில் அதிக ஒட்டங்கள், அதிகமான அரைச்சதங்கள், ஒரே தொடரில் அதிக ஓட்டங்கள் போன்ற சாதனைகள் இவர்வசம் உள்ளன.

இவரது ஒருநாள் போட்டிக்கான சாதனைகளை எடுத்துநோக்கினால், இந்தியா சார்பில் அதிவேக சதம்(52 balls), இந்தியா சார்பில் அதிவேக 1000, 5000 ஓட்டங்கள், இந்தியா சார்பில் அதிவேகமாகவும் உலக சார்பில் இரண்டாவதாகவும் அதிகூடிய 6000, 7000 ஓட்டங்களையும் பெற்றுள்ளார். உலகளவில் அதிவேகமாக 8000, 9000 ஓட்டங்களையும் பெற்றுள்ளார். மற்றும் அதிவேகமாக முப்பது சதங்களை விளாசித்தள்ளியுள்ளார். மற்றும் சர்வதேச 15,000 ஓட்டங்களை அதிவேகமாக கடநதவர்கள் சார்பில் முதல்நிலையில் உள்ளார்.


முதலாவது கிரிக்கெட் வீரராக அணித்தலைவாராக இருந்து கொண்டு தனது முதல்மூன்று இனிங்சுகளில் சதங்களை விளாசியுள்ளார். முதலாவது இந்தியன் டெஸ்ட் தலைவராக இரட்டைசதம் கடந்துள்ளார். கப்டனாக இருந்து கொண்டு ஒருநாள் போட்டிகளில் வேகமாக ஆயிரம் ஓட்டங்களைக் கடந்தும் இருக்கிறார். ஒரே ஒரு சாதனை வீரராக தொடர்ச்சியான நான்கு டெஸ்ட் தொடர்களில் சதங்களை விளாசியுள்ளார்.


இதுவரை 60 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய விராட் 4658 ஓட்டங்களை சராசரி 49.55 இல் பெற்றுள்ளார். அதிகபட்சம் 235 ஓட்டமாகும். இவ் ஓட்டதொகையில் 14 அரைச்சதங்களும் 17 சதங்களும் 4 இரட்டைசதங்களும் அடங்கும்.

இதுவரை 202 ஒருநாள் போட்டிகளில் ஆடிய விராட் 9030 ஓட்டங்களை சராசரி 55.74 இல் குவித்துள்ளார். அதிகபட்சம் 183 ஆகும். இவ் ஓட்ட தொகையில் 45 அரைச்சதங்களும் 32 சதங்களும் அடங்கும்.


இதுவரை 54 இருபது இருபது போட்டிகளில் ஆடிய விராட் 1943 ஓட்டங்களை 53.97 எனும் சராசரியில் பெற்றுள்ளார். அதிகபட்சம் 90 ஓட்டமாகும். இவ் ஓட்டத்தொகையில் 18 அரைச்சதங்களும் அடங்கும்.
சி.சாந்தகுமார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.