Foot Ball

யாழ்-கிளி மைலோக் கிண்ண இறுதியில் இரு புதிய அணிகள் பலப்பரீட்சை ..!!

மைலோக் கிண்ணம் 2017 இற்கான யாழ்ப்பாண மற்றும் கிளிநொச்சி மாவட்ட கழக அணிகளுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுத்தொடர் யாழ் துரையப்பா மைதானம் மற்றும் அரியாலை உதைபந்தாட்டப் பயிற்சி மைதானம் ஆகியவற்றில் நடைபெற்று வருகின்றது.

இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி கிளிநொச்சி வலைப்பாடு  ஜெகமீட்பர் விளையாட்டுக்கழகம், யாழ்-வேலணை  துறையூர் ஐயனார்  விளையாட்டுக்கழகத்தை   வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுளைந்தது.


இரண்டாவது அரையிறுதியில் யாழ்-ஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டுக்கழகம் யாழ்-பாசையூர் சென் அன்ரனீஸ் அணியை வெற்றி பெற்று இறுதிக்கு தெரிவானது.


இதுவரை நடைபெற்ற நான்கு மைலோ கிண்ண தொடர்களிலும் நாவாந்துறை சென்மேரிஸ் மற்றும் பாசையூர் சென்அன்ரனீஸ் ஆகிய அணிகள் தலா 3 தடவையும் நவிண்டில் கலைமதி மற்றும் குருநகர் பாடுமீன் ஆகிய அணிகள் தலா ஒவ்வொரு தடவையும் இறுதிக்கு முன்னேற்றியதுடன் ஐந்தாவது தொடரில் இரு புதிய அணிகள் இறுதியில் மோதுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை யாழ் துரையப்பா மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.