Sri Lanka

2016/17 இன் சிறந்த கிரிக்கெட் வீரராக ஹேரத்; நான்கு விருதுகளை அள்ளினார் அசேல..!! (புகைப்படங்களுடன் முழுமையான விபரங்கள் உள்ளே)

இலங்கை கிரிக்கெட்டில் திறமையை வெளிப்படுத்திய வீரர்களுக்கான ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் “டயலொக் விருது வழங்கல்” நிகழ்வு கொழும்பு, வத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் விருந்தகத்தில் நிறைவுக்கு வந்துள்ளது.

2016 இல் திறமையை வெளிப்படுத்திய இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் பலர் விருதுவழங்கி கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் கபில்தேவ் கலந்துகொண்டார்.

2016 இன் சிறந்த வீரராக ரங்கன ஹேரத் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை நான்கு விருதுகளை அள்ளி அசேல குணரட்ன அதிக விருதுகளைப் பெற்ற வீரராக தெரிவானார்.


விருதுகள் விபரம்



ஆண்டின் சிறப்பு விருதுகள்

  • Dialog Cricketer of the Year-ரங்கன ஹேரத்




  • ஆண்டின் நம்பிக்கைக்குரிய கிரிக்கெட் வீரர் – அசேல குணரட்ன




  • வளர்ந்து வரும் வீரர்-நிரோஷன் டிக்வெல்ல



  • ஆண்டின் சிறந்த வீராங்கனை-சமாரி அத்தப்பத்து


  • சிறந்த சர்வதேச நடுவர்- குமார் தர்மசேன (அவர் சார்பாக அவரது மகன்)







டெஸ்ட் போட்டிக்கான சிறப்பு விருதுகள்

  • சிறந்த துடுப்பாட்ட வீரர்- தனஞ்சய டீ சில்வா (அவர் சார்பாக சந்திமால் விருதைப் பெற்றார்)

  • சிறந்த பந்துவீச்சாளர்-ரங்கன ஹேரத்



  • சிறந்த சகலதுறை வீரர்-டில்ருவான் பெரேரா



ஒருநாள் போட்டிக்கான சிறப்பு விருதுகள்

  • சிறந்த துடுப்பாட்ட வீரர் – குஷால் மெண்டிஸ்


 

  • சிறந்த பந்துவீச்சாளர்-சுரங்க லக்மால் 



  • சிறந்த சகலதுறை வீரர்-அசேல குணரட்ன  

  • சிறந்த துடுப்பாட்ட வீராங்கனை-சமாரி அத்தப்பத்து



  • சிறந்த பெண் பந்துவீச்சாளர்- இனோஹா ரணவீர




இருபதுக்கு இருபது சிறப்பு விருதுகள்

  • சிறந்த துடுப்பாட்ட வீரர்-அசேல குணரட்ன 





  • சிறந்த பந்துவீச்சாளர்-லசித் மலிங்க





  • சிறந்த சகலதுறை வீரர்-அசேல குணரட்ன






  • சிறந்த துடுப்பாட்ட வீராங்கனை- சமாரி அத்தப்பத்து





  • சிறந்த பெண் பந்துவீச்சாளர் – சுரண்டிஹ குமாரி




உள்ளூர் போட்டிகளுக்கான விருதுகள்


  • சிறந்த அணி (Champions)-SSC கழகம்



  • சிறந்த அணி (Runners up)- சிலோ மேரியன்ஸ்





  • சிறந்த துடுப்பாட் வீரர் – சதீர சமரவிக்கிரம



  • சிறந்த பந்துவீச்சாளர் – மிலிந்த புஸ்பகுமார (அவர் சார்பாக அவரது சக வீரர்)




  • சிறந்த சகலதுறை வீரர்- சத்துரங்க டீ சில்வா




  • நம்பிக்கைக்குரிய வீரர்- வணிது ஹசரங்க  (அவர் சார்பாக அவரது சகோதரர்)




  • வளர்ந்துவரும் வீரர்- ரொன் சத்துரங்குப்த (அவர் சார்பாக அஷான் பிரியஞ்சன்




  • சிறந்த நடுவர் – ரெய்மோ மாட்டினோஸ்




  • சிறந்த ஆட்ட நடுவர்- வெண்டோல் வெப்ரோய்



Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.