கட்டுரைகள்

முறை தவறிய பந்துவீச்சு (Illegal bowling action) என்றால் என்ன..??

முறை தவறிய பந்துவீச்சுக்கான (Illegal bowling action) ICC யின் வரைவிலக்கணம்

பந்துவீச்சை நிகழ்த்தும் போது, கையானது தோள் மூட்டின் கிடைமட்ட அச்சுக்கு சமாந்தரமாக வரும் தருணத்திற்கும் – பந்தைக் கைவிடும் தருணத்திற்கும் இடையிலான காலப்பகுதியில் முழங்கை மூட்டு 15 பாகைக்கு மேற்பட்ட நீட்டுதலை(extension) அல்லது மடிதலை(flexion) காட்டுமாயின் அது முறைதவறிய பந்தாக கருதப்படும்.


அதாவது மேலே படத்தில் காட்டப்பட்ட இரண்டு தருணங்களினதும் முழங்கை மூட்டில் அமைக்கப்படும் கோணங்களுக்கு இடையிலான வித்தியாசம் 15 பாகையை தாண்டினால் மட்டுமே அது முறை தவறிய பந்து வீச்சாகும்.


முழங்கை மடிந்தால் முறைதவறிய பந்துவீச்சா?

இல்லை, கை தோள்மூட்டிற்கு சமாந்தரமாக வரும் போதும் பந்தை கைவிடும் போதும் கையினது மடிப்பு கோணங்களில் 15 பாகைக்கு மேற்பட்ட வித்தியாசம் வராத இடத்து அது முறை தவறிய பந்துவீச்சு அல்ல.

முறைதவறிய பந்துவீச்சு முறைகளால் தடை செய்யப்பட்ட பந்துவீச்சாளர்கள்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.