Home

13 வயதுக்குட்பட்ட கிரிக்கெட்- குட்டி சங்கா அசத்தல் அரைச்சதம்

13 வயதுக்குட்பட்ட கிரிக்கெட்- குட்டி சங்கா அசத்தல் அரைச்சதம்.

13 வயதுக்குட்பட்ட சிங்கர் கிண்ண முதலாம் பிரிவு கிரிக்கெட் போட்டியில் அசோகா வித்தியாலய அணிக்கும், கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரிக்கும் இடையிலான போட்டி தீபாவளி தினத்தன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி, முதல் இன்னிக்ஸுக்கான வெற்றி புள்ளியை பெற்றுக்கொண்டது.

போட்டியில் கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி அணியின் சார்பில் விளையாடிய குட்டி சங்கா என்று அழைக்கப்படும் சண்முகநாதன் சாருஜன் ஆட்டமிழக்காது 65 ஓட்டங்கள் பெற்று அசத்தல் அரைச்சதம் அடித்துள்ளார்.

கிரிக்கெட் அரங்கில் எதிர்கால சங்கா என்றழைக்கப்படும் சண்முகநாதன் சாருஜனுக்கு ,குமார் சங்கக்காராவின் இன்றைய 40 வது பிறந்த நாளில் எங்கள் இனிய வாழ்த்துக்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.