மெஸ்ஸியைப் பின்தள்ளிய கோஹ்லி,உசைன் போல்டை குறிவைக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி நாளுக்கு நாள் சாதனைகள் பலவற்றைப் புதுப்பித்து வருகின்றார்.
அதனடிப்படையில், பிந்திய தரவுகளின் பிரகாரம் ஆர்ஜண்டீனா அணியின் தலைவரும் பார்சிலோனா கழகத்தின் பிரபல கால்பந்து ஜாம்பவானுமான மெஸ்ஸியை கோஹ்லி முந்தியுள்ளார்.
அதிக சந்தைப் பெறுமதி (Brand Value ) உடைய விளையாட்டு வீரர்களுக்கான போர்ப்ஸ் சஞ்சிகையின் பட்டியலில், கோஹ்லி ஏழாவது இடத்துக்கு முன்னேறியுள்ள நிலையில், மெஸ்ஸி ஒன்பதாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.
இந்த பட்டியலில் சுவிஸ்லாந்தின் பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடெரர் முதலிடத்தில் காணப்படுகின்றார்.
1.ரோஜர் பெடெரர் $37.2m
2.லெப்ரோன் ஜேம்ஸ் $33.4m
3.உசைன் போல்ட் $27m
4.கிறிஸ்டியானோ ரொனால்டோ $21.5m
5.பில் மைக்கேல்சன் $19.6m
6.டைகர் வூட்ஸ் $16.6m
7.விராட் கோஹ்லி $14.5m
8.ரோரி மேக்ல்ரோய் $13.6m
9.லியோனல் மெஸ்ஸி $13.5m
10.ஸ்டெப் கர்ரி $13.4m
