Foot Ball

லா லிகா: பார்சிலோனா மற்றும் ரியல் மட்ரிட் அணிகள் வெற்றி

லா லிகா தொடரில் ஒன்பதாவது வார போட்டிகள் இன்று நிறைவுக்கு வந்துள்ளன. இதில் பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகள் வெற்றி பெற்று தமது நிலைகளைத் தக்க வைத்துள்ளன.

சனிக்கிழமை இடம்பெற்ற பார்சிலோனா மற்றும் மலகா அணிகளுக்கான போட்டியில் பார்சிலோனா 2-0 என்ற கோல் கணக்கில் இலக்கு வெற்றி பெற்றுள்ளது. பார்சிலோனா சார்பில் டியூலோபு மற்றும் இனியெஸ்டா கோல் அடித்து அசத்தினார்கள்.

அதே போல் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ரியல் மாட்ரிட் மற்றும் எய்பர் அணிகளுக்கிடையிலான போட்டியில் ரியல் மாட்ரிட் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. ரியல் மாட்ரிட் சார்பில் அசேன்சியோ மற்றும் மார்செலோ கோல் அடித்து அசத்தினார்கள்.

ஒன்பதாவது போட்டி வார முடிவில் பார்சிலோனா அணி தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கிறது. அத்துடன் வெலென்சியா தொடர்ந்தும் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. ரியல் மாட்ரிட் மூன்றாவது இடத்தில் தொடர்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.