Sri Lanka

புதிய தேர்வுக்குழு அதிரடி; மூன்று புதுமுகங்களுடன் களமிறங்குகின்றது இலங்கை

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் விபரம் சற்றுமுன்னர் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. புதிய கிரிக்கெட் தேர்வுக்குழு தெரிவுசெய்த முதல் அணியாக இது அமைகின்றது.

டினேஸ் சந்திமால் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இவ் அணியில், இந்தியாவுக்கெதிரான போட்டிகளில் காயமடைந்த நுவான் பிரதீப், ரங்கன ஹேரத் மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு எதிரான குழாமிலிருந்து நீக்கப்பட்ட கௌசல் சில்வாவிற்கும் அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது.



இலங்கை அணியின் எதிர்கால நட்சத்திரமாக மிளிர்வார் என எதிர்பார்க்கப்படும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சதீர சமரவிக்கிரம், முதற்தடவையாக இலங்கைக் குழாத்தினுள் உள்வாங்கப்பட்டுள்ளார். மேலும் அறிமுகப் பந்துவீச்சாளராக லகிரு கமகே அணிக்குள் அழைக்கப்பட்டிருக்கின்றார்.

மேலும், பயிற்சிகளின் போது கால்த்தசைகளில் ஏற்பட்ட கிழிவு காரணமாக அஞ்சலோ மத்தியூஸ் முதலாவது போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியூஸிற்கு பதிலாக அறிமுகவீரர் ரோஷன் சில்வா அணியில் இணைக்கப்பட்டுள்ளார். 


டெஸ்ட் அணி விபரம்
1. டினேஸ் சந்திமால்

2.கௌசல் சில்வா

3.திமுத் கருணாரட்ன

4.குஷால் மென்டிஸ்

5.லகிரு திரிமான்னே

6. ரோஷன் சில்வா

7. நிரேஷன் டிக்வெல்ல

8.தில்ருவான் பெரேரா

9.ரங்கன ஹேரத்

10.சதீர சமரவிக்கிரம

11.லக்சான் சண்டகான்

12.சுரங்க லக்மால்

13.நுவான் பிரதீப்

14.விஸ்வா பெர்னாண்டோ

15.லகிரு கமகே

மாற்று வீரர்கள் 

1. தனஞ்சய டீ சில்வா

2.ஜெப்ரி வெண்டசாய்

3.அகில தனஞ்சய 

4.லகிரு குமார

5.தசுன் சானக்க

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.