Sri Lanka

இலங்கை அணியிலிருந்து நீக்கப்பட்டார் மத்தியூஸ்….!!!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் விபரம் இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியாகாத நிலையில், முதலாவது டெஸ்ட் போட்டியில் அஞ்சலோ மத்தியூஸ் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பயிற்சிகளின் போது கால்த்தசைகளில் ஏற்பட்ட கிழிவே மத்தியூஸின் விலகலுக்கான காரணமாகும். கடந்த ஒருவருட காலத்தில் மத்தியூஸ் உபாதைக்குள்ளாகும் நான்காவது சந்தர்ப்பமாக இது அமைகின்றது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 28ம் திகதி அபுதாபியில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.