Home

கண்டி, பல்லேகல மைதானத்தில் முரளிக்கு நேர்ந்த அவலம்..!

கண்டி, பல்லேகல மைதானத்தில் முரளிக்கு நேர்ந்த அவலம்..!

இலங்கையின் முன்னணி சுழல் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகூடிய விக்கெட்டுக்களை வீழ்த்தி உலக சாதனையை தன்வசம் வைத்திருப்பவர்.

ஆயினும் முரளிதரனுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் சரியான கௌரவத்தை இதுவரை வழங்கவில்லை என்பது பலதரப்பட்ட ரசிகர்களின் குற்றச்சாட்டாகும்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நிகழ்ந்திருக்கும் அவலம் முரளியின் ரசிகர்களை மட்டுமல்லாது இலங்கை கிரிக்கெட்டை நேசிக்கும் ரசிகர்களையும் வேதனையடைய செய்துள்ளது.

2011 ம் ஆண்டு உலக கிண்ண போட்டிகளுக்காக புனரமைப்பு செய்யப்பட்ட இந்த பல்லேகல மைதானத்துக்கு முத்தையா முரளிதரனின் நாமம் சூட்டப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆயினும் அதன்பின்னர் இந்த மைதானத்துக்கு உத்தியோகபூர்வமாக முரளியின் நாமம் அறிவிக்கபடவில்லை, நேற்றைய நாளில் அங்கு மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த முரளியின் பெயர்ப்பலகை ஒன்று அங்கிருந்து சிலவிசாமிகளால் அகற்றப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.

முரளியின் தந்தையாரான சின்னையா முத்தையா, இந்த குற்றசாட்டை கண்டி அஸ்கிரிய மகாநாயக்கரிடம் முன்வைத்துள்ளார், அத்தோடு தனது மகனின் பெயரை குறித்த மைதானத்துக்கு சூட்டவேண்டும் எனும் கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுக்களை வீழ்த்திய முரளிதரன் எந்தவொரு போட்டியிலும் இலங்கை அணியை வழிநடத்தியிருக்கவில்லை, சிறுபான்மை இனத்தவராக இருந்த காரணத்தால்தான் முரளி இலங்கை கிரிக்கெட்டால் கௌரவம் பெறவில்லை என்ற யூகங்களுக்கும் ,கதைகளுக்கும் மத்தியில் இவ்வாறான செயல்பாடும் ரசிகர்களை கொஞ்சம் விசனமடைய செய்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.