Pakistan

உலக பதினொருவர் அணியை சொந்த மண்ணில் வீழ்த்தி விருந்து படைத்தது பாகிஸ்தான் ….!!

உலக பதினொருவர் அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதலாவது போட்டி லாகூர் கடாபி மைதானத்தில் இன்று இடம்பெற்றது.

பாகிஸ்தானில் மீளவும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை கொண்டு சேர்க்கும் முகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இந்த சுதந்திர கிண்ண தொடரின் முதல் போட்டியை பாகிஸ்தான் வெற்றிகொண்டு சொந்த மண்ணில் ரசிகர்களுக்கு பெருவிருந்து படைத்துள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் பாகிஸ்தான் மண்ணில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறுகின்ற காரணத்தால் லாகூர் கடாபி மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மோற்கொள்ளப்பட்டுள்ளன.

போட்டியின் நாணய சுழற்சியில் உலக பதினொருவர் அணித்தலைவர் டு பிளஸ்சில் வெற்றி பெற்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியினர் அதிரடியாக துடுப்பாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 197 ஓட்டங்கள் பெற்றுள்ளனர்.

துடுப்பாட்டத்தில் இளம் நட்சத்திர வீரர் பாபர் ஆஸாம் 86 ஓட்டங்களைக் குவிக்க சொஹைப் மாலிக் மற்றும் அகமட் ஷெசாத் ஆகியோர் முறையே 38, 39 ஓட்டங்களைப் பெற்றார்கள்.

பதிலளித்த உலக பதினொருவர் அணி பாக்கிஸ்தான் வீரர்களின் அபார பந்துவீச்சிற்கு முகம்கொடுக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுக்களைப் பறிகொடுத்தனர். இறுதியில் உலக பதினொருவர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 177 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதனால் 20 ஓட்டங்களால் வெற்றியைத் தனதாக்கிய பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட சுதந்திரக் கிண்ணத் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி நாளை நடைபெறவுள்ளது

உலக பதினொருவர் அணி சார்பாக டூபிளசீஸ் மற்றும் டரன் சமி ஆகியோர் தலா 29 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் பாகிஸ்தான் சார்பாக சொஹைல் கான், சொஹாப் கான் மற்றும் ருமான் ரூயிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைச் சாய்ந்தார்கள். ஆட்டநாயகனாக 86 ஓட்டங்களை விளாசிய பாபர் ஆஸாம் தெரிவானார்.





2009 ம் ஆண்டில் இலங்கை அணி பயணம் செய்த வாகன தொடரணி மீது லாகூரில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலுக்கு பின்னர், சர்வதேச அணிகள் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட மறுத்துவந்த நிலையில் சர்வதேச ஆட்டங்கள் மீளவும் பாகிஸ்தான் மண்ணில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.