India

அவுஸ்திரேலிய அணிக்கெதிராக இரு கைகளாலும் பந்துவீசி அசத்திய இந்திய வீரர்…( வீடியோ இணைப்பு)

இந்தியாவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கும் இந்திய அணிக்கும் இடையில் 5 ஒருநாள் போட்டிகளும், 3 T20 போட்டிகளும் கொண்ட தொடர் எதிர்வரும் 17 ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

அதற்கு முன்னதாக இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒரேயொரு பயிற்சி ஆட்டம் ஏற்பாடாகியிருந்தது. குர்கீரத் சிங் தலைமையிலான இந்திய கிரிக்கெட் சபை தலைவர் அணிக்கும், ஆஸ்திரேலிய அணிக்குமிடையிலான இன்றைய பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலிய அணி 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் சபை தலைவர் அணி சார்பில் இன்று பந்துவீசிய அக்சய் கார்னிவார் எனும் 24 வயதான சுழல் பந்து வீச்சாளர் எல்லோரது பார்வைக்கும் சிறப்பாக மிளிர்ந்தார்.

மகாராஷ்டிராவை சேர்ந்த அக்சய் கார்னிவார் இருகைகளாலும் இன்று பந்துவீசியமை குறிப்பிடத்தக்கது.6 ஓவர்கள் பந்துவீசிய இவர், ட்ரெவ்ஸ் ஹெட்டை ஆட்டமிழக்க செய்ததுடன் 59 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவின் ரொபின் பீட்டர்சன் இரு கைகளாலும் பந்தை களத்தடுப்பு செய்யும் ஆற்றல் கொண்டிருந்ததோடு, இலங்கையின் ஹசான் திலகரத்ன 1996 ம் ஆண்டு கென்யா அணிக்கெதிரான போட்டியில் இரு கைகளாலும் பந்து வீசினார்.

இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட அணியின் தற்போதைய தலைவரான கமிந்து மெண்டிஸ், கடந்த இளையோர் உலக கிண்ண போட்டிகளில் இவ்வாறு இரு கைகளாலும் பந்துவீசியமையும் குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/MadridistaSays/status/907511992709111808

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.