Pakistan

பாகிஸ்தானில் மீண்டும் களைகட்டிய சர்வதேசப் போட்டிகள்…(படங்கள் இணைப்பு)

உலக பதினொருவர் அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சுதந்திர கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி லாகூர் கடாபி மைதானத்தில் இடம்பெற்றுவருகின்றது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் பாகிஸ்தான் மண்ணில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறுகின்ற காரணத்தால் லாகூர் கடாபி மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மோற்கொள்ளப்பட்டதோடு, ரசிகர்கள் பெருந்திரளானோர் தமது ஆதரவை வழங்கியதையும் காணக்கூடியதாகவிருந்தது.


பதாதைகள் மூலமாக உலக பதினொருவர் அணிக்கும், சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு தமது நன்றிக்களையும் தெரிவித்தனர்.அத்தோடு மைதானத்தி உலக பதினொருவர் அணியினர் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டமையும் சிறப்பாக நடந்தேறியது.







2009 ம் ஆண்டில் இலங்கை அணி பயணம் செய்த வாகன தொடரணி மீது லாகூரில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலுக்கு பின்னர், சர்வதேச அணிகள் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட மறுத்துவந்த நிலையில் சர்வதேச ஆட்டங்கள் மீளவும் பாகிஸ்தான் மண்ணில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.