Pakistan

உலக பதினொருவர் அணிக்கு பலமான இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான் ….!!!

உலக பதினொருவர் அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதலாவது போட்டி லாகூர் கடாபி மைதானத்தில் இடம்பெற்றுவருகின்றது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் பாகிஸ்தான் மண்ணில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறுகின்ற காரணத்தால் லாகூர் கடாபி மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மோற்கொள்ளப்பட்டுள்ளன.

போட்டியில் நாணய சுழற்சியில் உலக பதினொருவர் அணித்தலைவர் டு பிளஸ்சில் வெற்றி பெற்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியினர் அதிரடியாக ஆடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 197 ஓட்டங்கள் குவித்தனர்

பாகிஸ்தான் அணி சார்பாக இளம் நட்சத்திர வீரர் பாபர் ஆஸம் 86 ஓட்டங்களைக் குவிக்க சொஹைப் மலிக் 38 ஓட்டங்களை விளாசினார். பந்துவீச்சில் உலக பதினொருவர் அணி சார்பாக திஸார பெரேரா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். உலக பதினொருவர் அணிக்கு 198 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2009 ம் ஆண்டில் இலங்கை அணி பயணம் செய்த வாகன தொடரணி மீது லாகூரில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலுக்கு பின்னர், சர்வதேச அணிகள் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட மறுத்துவந்த நிலையில் சர்வதேச ஆட்டங்கள் மீளவும் பாகிஸ்தான் மண்ணில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.