Australia

இந்திய கிரிக்கெட் தலைவர் அணியை பந்தாடியது அவுஸ்திரேலியா…!

இந்திய கிரிக்கெட் தலைவர் அணியை பந்தாடியது அவுஸ்திரேலியா…!

இந்தியாவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கும் இந்திய அணிக்கும் இடையில் 5 ஒருநாள் போட்டிகளும், 3 T20 போட்டிகளும் கொண்ட தொடர் எதிர்வரும் 17 ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

அதற்கு முன்னதாக இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒரேயொரு பயிற்சி ஆட்டம் ஏற்பாடாகியிருந்தது.

குர்கீரத் சிங் தலைமையிலான இந்திய கிரிக்கெட் சபை தலைவர் அணிக்கும், ஆஸ்திரேலிய அணிக்குமிடையிலான இன்றைய பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 347 ஓட்டங்கள் பெற்றது, ஸ்மித், வோர்னர், ட்ரெவ்ஸ் ஹெட், ஸ்டோய்னிஸ் ஆகியோர் அரைசதமடித்தனர்

தமிழகத்தின் இளம் வீரர் வொசிங்டன் சுந்தர் 8 ஓவர்கள் பந்துவீசி 23 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

பதிலுக்கு ஆடிய இந்திய கிரிக்கெட் சபை தலைவர் அணியினர் யாரும் சிறப்பாக பிரகாசிக்காத நிலையில் 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 17 ம் திகதி சென்னையில் இடம்பெறவுள்ளது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.