Pakistan

பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச போட்டிகள்- நாணயச்சுழற்சியை வென்றது உலக பதினொருவர் அணி…!

நீண்ட இடைவெளிக்கு பின்னர் பாகிஸ்தான் மண்ணில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறுகின்ற காரணத்தால் லாகூர் கடாபி மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்படுகளுடன் சுதந்திர கிண்ண இருபதுக்கு இருபது போட்டி ஆரம்பித்துள்ளது.

உலக பதினொருவர் அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதலாவது போட்டியின் நாணய சுழற்சியில் உலக பதினொருவர் அணித்தலைவர் டு பிளஸ்சில் வெற்றி பெற்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
2009 ம் ஆண்டில் இலங்கை அணி பயணம் செய்த வாகன தொடரணி மீது லாகூரில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலுக்கு பின்னர், சர்வதேச அணிகள் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட மறுத்துவந்த நிலையில் சர்வதேச ஆட்டங்கள் மீளவும் பாகிஸ்தான் மண்ணில் ஆரம்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணி விபரம்



உலகப் பதினொருவர்  அணி விபரம்


Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.