Home

மீண்டும் பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட்- உலக பதினொருவர் அணி,பாகிஸ்தான் அணிகளின் முழுமை விபரம்  ..!

மீண்டும் பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட்- உலக பதினொருவர் அணி,பாகிஸ்தான் அணிகளின் முழுமை விபரம்  ..!

பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகளை மீளவும் நடத்தும் ஓர் அங்கமாக அங்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஏற்பாட்டில் உலக பதினொருவர் அணி ,பாகிஸ்தான் அணியுடன் மூன்று T20  போட்டிகளில் விளையாடவுள்ளது.

2009 ம் ஆண்டு பாகிஸ்தான் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கையின்  வாகனத்தொடரணி மீது பயங்கரவாதிகள்  தாக்குதல் நடத்தினர்.இதன் காரணத்தால் சர்வதேச அணிகள் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட மறுத்து வந்தன.

இந்தநிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீளவும் சர்வதேச ஆட்டங்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செப்டெம்பர் 12 ,13 ,15 ம் திகதிகளில் இடம்பெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான உலக பதினொருவர் மற்றும் பாகிஸ்தான் அணிகளின் முழுமையான விபரம்.

உலக பதினொருவர் அணி விபரம்.

டு பிளெஸ்ஸிஸ் (தென் ஆப்பிரிக்கா) (தலைவர் ), ஹாசிம் ஆம்லா (தென் ஆப்பிரிக்கா), சாமுவேல் பத்ரீ (மேற்கிந்திய தீவுகள்), ஜோர்ஜ் பெய்லி (ஆஸ்திரேலியா), போல் காலிங்வுட் (இங்கிலாந்து), பென் கட்டிங் (ஆஸ்திரேலியா), க்ராண்ட் எலியட் (நியூஸிலாந்து ), தமீம் இக்பால் (பங்களாதேஷ்), டேவிட் மில்லர் (தென் ஆப்பிரிக்கா), மோர்னே மோர்கல் (தென் ஆப்பிரிக்கா), டிம் பெயின் (wk) (ஆஸ்திரேலியா), திசார பெரேரா (இலங்கை ), இம்ரான் தாஹிர் (தென் ஆப்பிரிக்கா), டேரன் சாமீ (மேற்கிந்திய தீவுகள்).

பாகிஸ்தான் அணி விபரம்.

சப்பிரஸ் அஹமெட்(தலைவர்),பஹார் சமான்,அஹமெட் சேஷாத்,பாபர் அசாம்,சோயிப் மாலிக்,உமர் அமின்,இமாட் வாசிம்,ஷடாப் கான்,மொஹமெட் நவாஸ்,பாஹிம் அஷ்ரப்,ஹசன் அலி,மொஹமெட் அமீர்,அமீர் ஜாமீன்,ருமான் ராய்ஸ்,சொஹைல் கான்,உஸ்மான் ஷின்வாரி

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.