Home

பாகிஸ்தானை அடைந்தது உலக பதினொருவர் அணி (படங்கள் இணைப்பு ) ..!

 

பாகிஸ்தானை அடைந்தது உலக பதினொருவர் அணி (படங்கள் இணைப்பு ) ..!

பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகளை மீளவும் நடத்தும் ஓர் அங்கமாக அங்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஏற்பாட்டில் உலக பதினொருவர் அணி ,பாகிஸ்தான் அணியுடன் மூன்று T20  போட்டிகளில் விளையாடவுள்ளது.

அதற்காக டுபாயில் பயிற்சிகளை மேற்கொண்ட டு பிளஸ்ஸிஸ் தலைமையிலான உலக பதினொருவர் அணி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாகிஸ்தானை அடைந்துள்ளது.

2009 ம் ஆண்டு பாகிஸ்தான் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கையின்  வாகனத்தொடரணி மீது பயங்கரவாதிகள்  தாக்குதல் நடத்தினர்.இதன் காரணத்தால் சர்வதேச அணிகள் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட மறுத்து வந்தன.

இந்தநிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீளவும் சர்வதேச ஆட்டங்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செப்டெம்பர் 12 ,13 ,15 ம் திகதிகளில் இடம்பெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான உலக பதினொருவர் அணி விபரம்.

உலக பதினொருவர் அணி விபரம்.

டு பிளெஸ்ஸிஸ் (தென் ஆப்பிரிக்கா) (தலைவர் ), ஹாசிம் ஆம்லா (தென் ஆப்பிரிக்கா), சாமுவேல் பத்ரீ (மேற்கிந்திய தீவுகள்), ஜோர்ஜ் பெய்லி (ஆஸ்திரேலியா), போல் காலிங்வுட் (இங்கிலாந்து), பென் கட்டிங் (ஆஸ்திரேலியா), க்ராண்ட் எலியட் (நியூஸிலாந்து ), தமீம் இக்பால் (பங்களாதேஷ்), டேவிட் மில்லர் (தென் ஆப்பிரிக்கா), மோர்னே மோர்கல் (தென் ஆப்பிரிக்கா), டிம் பெயின் (wk) (ஆஸ்திரேலியா), திசார பெரேரா (இலங்கை ), இம்ரான் தாஹிர் (தென் ஆப்பிரிக்கா), டேரன் சாமீ (மேற்கிந்திய தீவுகள்).

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.