Home

இலங்கை கிரிக்கெட்டை மீட்க வருகிறார் முன்னாள் தலைவர் …!

இலங்கை கிரிக்கெட்டை மீட்க வருகிறார் அரவிந்த…!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் முன்னணி துடுப்பாட்ட வீரராகவும் திகழ்ந்த அரவிந்த டி சில்வா மீண்டும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஆலோசனை குழுவுக்கு வருகிறார் எனும் இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஆலோசனை குழுவின் தலைவராக இருந்த அவிந்த டி சில்வா , கடந்த மே மாதம் தனிப்பட்ட காரணங்களால் பதவி விலகினார்.

ஆயினும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டும் , தேசிய அணியும்  முகம்கொடுக்கும் பாரிய நெருக்கடியால் அரவிந்தவை மீளவும் அழைக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தலைமை பயிற்சியாளராக திகழ்ந்த கிரஹாம் போர்டின் வெற்றிடத்துக்கு புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வதே இவரது முதல் பணி என்றும் அறியக்கிடைக்கிறது.

அரவிந்த டி சில்வா 2010 -2011  காலப்பகுதியில் இலங்கை அணியின் தலைமை தேர்வாளராகவும் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.