Bangladesh

டெஸ்ட் போட்டிகள் தொடர்பில் சாகிப் அல் ஹசன் திடீர் முடிவு…!  அதிர்ச்சியில் ரசிகர்கள் .

டெஸ்ட் போட்டிகள் தொடர்பில் சாகிப் அல் ஹசன் திடீர் முடிவு…!  அதிர்ச்சியில் ரசிகர்கள் .

பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரரான சாகிப் அல் ஹசன் இன்றைய தினத்தில் அதிர்ச்சிகரமான முடிவை அறிவித்துள்ளார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு எழுத்துமூலமாக தனது இந்த முடிவை சாகிப் அல் ஹசன் அறிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் அடுத்துவரவுள்ள ஆறு மாதங்களுக்கு தன்னை டெஸ்ட்  போட்டிகளில் இணைத்துக்கொள்ள வேண்டாம் என்று பங்களாதேஷ் கிரிக்கெட் சபையிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தென் ஆபிரிக்க அணியுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான பங்களாதேஷ் அணி நாளை  அறிவிக்கப்படவுள்ள நிலையில் ,டெஸ்ட் போட்டிகளுக்கான சகலதுறை வீரர்கள் தரநிலையில் முதலிடம் வகிக்கும் சாகிப் அல் ஹசன் இந்த திடீர் முடிவை எடுத்துள்ளார்.

இதேபோன்ற முடிவை இலங்கை அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான தலைவர் உப்புல் தரங்கவும் அண்மையில் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிகமாக இவ்விருவரும் டெஸ்ட் போட்டிகளில் விரைவில் ஓய்வை அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.